FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on September 18, 2012, 01:18:19 AM

Title: எச்சி
Post by: Global Angel on September 18, 2012, 01:18:19 AM
தெருவிளக்கின் ஒளி வீச்சில் ¨
விழிகளின் அங்கஹீனம்
விரட்டியடிக்க
விடை தெரியாத விட்டிலாய்
விழுந்து கிடக்கிறது
சாலையை நோக்கிய
என் காதல் பயணம் ..


புரியாத மேடுகளாயும்
தெரியாத கோடுகளாயும்
தெரிந்த சில கோணங்கள் ஆலும்
செதுக்கப்பட  வாழ்க்கை
சிறிதும் சுவாரசியம்
அற்றதாகி விடுகின்றது
சில தோல்விகளின் முடிவில் ..


துயரத்தின் துயரை சுமந்தே
கண்களின் எடை அதிகரிக்கின்றது
அடிகடி நினைவலைகளில் மூழ்கும் போது...
கனவுகளை காவு கொடுத்த நெஞ்சம்
கதறி துடிப்பது
தெருநாய்க்கு கேட்டிருக்கும் போலும்
ஒரு பாடாய் ஊளை இடுகின்றது
ஊமையான என் உணர்வுகளுக்கு உடன்பட்டு ..


நிசப்தத்தின் ஆடை  கிழித்து
நீளமாய் ஒரு கேவல்
நிதானத்தை இழக்க செய்கின்றது
ஆழமாய் நேசித்து
அவலமாய் உதறிய உன்னை நினைத்து ...


எச்சியாய் நினைத்து
எள்ளி நகையடியபின்
மனதறையில் பள்ளி கொண்ட உன்னை
பட்டென்று தூக்கி வீசிவிட முடியவில்லை
சட்டென்று தூக்கி வீச
தடுக்கி விழுந்தும் எழுந்து
உன் பெயர் சொல்லி துடிக்கும்
இதயத்து தெரியாது
அவமானங்களும் அலட்சியங்களும் ....
Title: Re: எச்சி
Post by: Anu on September 18, 2012, 05:57:15 AM


புரியாத மேடுகளாயும்
தெரியாத கோடுகளாயும்
தெரிந்த சில கோணங்கள் ஆலும்
செதுக்கப்பட  வாழ்க்கை
சிறிதும் சுவாரசியம்
அற்றதாகி விடுகின்றது
சில தோல்விகளின் முடிவில் ..

துயரத்தின் துயரை சுமந்தே
கண்களின் எடை அதிகரிக்கின்றது
அடிகடி நினைவலைகளில் மூழ்கும் போது...
கனவுகளை காவு கொடுத்த நெஞ்சம்
கதறி துடிப்பது
தெருநாய்க்கு கேட்டிருக்கும் போலும்
ஒரு பாடாய் ஊளை இடுகின்றது
ஊமையான என் உணர்வுகளுக்கு உடன்பட்டு ..

 ....

arumaiyaana kavithai rose dear.
unga manadhin valiya romba nalla solludhu indha kavithai.
Time is the best medicine ..
ellam kadandhu pogum idhuvum kadandhu pogum.
ippa valiyaai theriyaradhu konja naal ponaa sugamaai theriyum..
Title: Re: எச்சி
Post by: Gotham on September 18, 2012, 11:58:12 AM

அழகான கவிதை. காதல் வலியை அழகான வார்த்தைக்கோர்வையாக்கியிருக்கீங்க.


தூய தமிழ் வார்த்தைகளாய் இருக்கும் கவிதையில் "எச்சி" மட்டும் துருத்திக் கொண்டு நிற்கிறது. எச்சில் அல்லது எச்சம் என்றிருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும். :)
Title: Re: எச்சி
Post by: Global Angel on September 18, 2012, 01:42:02 PM
கொத்தம்.. எச்சில் என்பது துப்பல் வாயில் இருந்து சுரகபடும் உமிழ் நீர் வெளியே துப்பப்படும் பொது எச்சில் ஆகின்றது .. எச்சம் என்பது மிச்சம் அது பயன் படுத்தியபின் மிச்சமாக இருக்கலாம் .. பயன் படுத்தாமலும் அது இருக்கலாம் ...எச்சி என்பது தமிழ் வார்த்தை இல்லையா ?


எச்சி என்பது  கடிதுவிட்டோ சாப்டுவிட்டோ இல்லை குடிதுவிட்டோ வாய்த்த பண்டமாக இருக்கலாம் .. அதாவது பிறரால் பயன்படுத்தபட்ட ஒரு பொருள் என்று அர்த்தம் தரும் ...
Title: Re: எச்சி
Post by: Gotham on September 18, 2012, 01:47:27 PM
நீங்க சொல்றதன் அர்த்தம் புரிகிறது. அது வழக்கில இருக்கும் சொல்னு நினைக்கிறேன். நல்லா தெரிஞ்சவங்க தான் சொல்லணும்.  :)


ஏதோ உறுத்தலாய் தெரிந்ததால் சொன்னேன்.
Title: Re: எச்சி
Post by: Global Angel on September 18, 2012, 01:56:48 PM


கௌதம்... நன்றி .. கவிதை நான் இங்கே படைப்பது... மற்றவர்களது பார்வைக்கு மட்டுமல்ல  குறை நிறைகளை ஆராய்ந்து ... அதன் நிறைவு குறைவுகளை நிவர்த்தி செயும் பொருட்டுதான .... தாங்கள் கருத்தால் நான் இபொழுது எச்சி பற்றி ஆராய்ச்சியில் இறங்கி உள்ளேன் ... மேலும் தங்கள் கருத்துகளை பகிர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் ....
Title: Re: எச்சி
Post by: ஆதி on September 18, 2012, 02:03:45 PM
கோதம், நீங்க சொல்வதை நான் ஏற்கிறேன்

ஆனால் சொல்லவரும் வலியை எச்சில் எனும் போது உணர்ந்து வாசிக்க வேண்டியிருக்கிறது

எச்சி எனும் போது வாசிக்கும் போது உணர்த்திவிடுகிறது

எச்சி எனும் வார்த்தை  இக்கவிதையில் துருத்தலாக தெரியவில்லை, வலியாக தெரிகிறது என்ப‌து என் க‌ருத்து

பேச்சு வ‌ழ‌க்கில் சில‌ வார்த்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் போது அது இன்னும் ப‌ல‌மாய் வாச‌க‌னை த‌க்குகிற‌து

பெய‌ர்த்தெடுத்த‌ல் என்ப‌தை க‌ண்ண‌தாச‌ன் ப‌ல‌ இட‌த்தில் பேர்த்தெடுத்த‌ல் என்று ப‌ய‌ன்ப‌டுத்த‌ க‌ண்டிருக்கிறேன்

அந்த‌ வ‌கையில் த‌வ‌றில்லை
Title: Re: எச்சி
Post by: Gotham on September 18, 2012, 02:15:04 PM
ஆதி


எச்சமும் அதே பொருளில் வரும் தானே?
Title: Re: எச்சி
Post by: ஆதி on September 18, 2012, 03:13:24 PM
எச்சம், அதிகமா கழிவை குறிக்கும் படியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ ப‌ட்டிருக்கிற‌து

பறவைகளின் எச்சம் இப்படி

எச்சம் என்பது மீதியையும் குறிக்கும்

எச்சிலை குறிக்காது கோதம்

Title: Re: எச்சி
Post by: Global Angel on September 18, 2012, 03:58:35 PM
இவரு பெயரு கோதம் ஆ ... இல்ல கௌதம் ஆஆ :( rompa naala sandegam
Title: Re: எச்சி
Post by: Gotham on September 18, 2012, 04:08:00 PM
என் பேரே வேற.. :) கோதம் என்பது Batman வசிக்கும் ஊர். :)