தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 17, 2012, 06:29:24 PM
Title: காதல்
Post by: ஆதி on September 17, 2012, 06:29:24 PM
பல வண்ணம் தோய்ந்து ஒரு பூ மலரும்.
கனக்கும் கால வெளி கடந்து ஐந்தாவது காலத்தில் ஒரு உலகம் விரியும்.
தனிமை நறுமணக்கும் நிமிடத்தை வட்டமிடும் அந்நிய தேவதைகள்..
நினைவின் புள்ளிகள் வளர்ந்து நிலவாய் பிரகாசிக்கும்.
விரும்பிய பாதையில் விழுவது பூக்களோ ? சருகுகளோ? பெருகும் ஞாபகங்கள் கொண்டு நூற்றாண்டையும் நூற்றாண்டையும் கடந்து வாழும்....
Title: Re: காதல்
Post by: Global Angel on September 17, 2012, 07:42:55 PM
வாவ் ... காதல்னா இப்டிதான்ல .... என்ன அருமையான எடுத்து காட்டுகள் பூகளோ சருகுகளோ பெருகும் ஞாபகங்கள் கொண்டு நூற்றாண்டையும் நூற்றாண்டையும் கடந்து வாழும்.... சூப்பர் ... லூசு தனமா இருந்தாலும் இதெல்லாம் வரும்யா.. ஹிஹி
Title: Re: காதல்
Post by: Anu on September 18, 2012, 06:09:17 AM
superb aadhi.. நினைவின் புள்ளிகள் வளர்ந்து நிலவாய் பிரகாசிக்கும்.
விரும்பிய பாதையில் விழுவது பூக்களோ ? சருகுகளோ? பெருகும் ஞாபகங்கள் கொண்டு நூற்றாண்டையும் நூற்றாண்டையும் கடந்து வாழும்....
romba romba nalla iruku..
Title: Re: காதல்
Post by: ஆதி on September 18, 2012, 03:30:09 PM
/வாவ் ... காதல்னா இப்டிதான்ல .... என்ன அருமையான எடுத்து காட்டுகள் பூகளோ சருகுகளோ பெருகும் ஞாபகங்கள் கொண்டு நூற்றாண்டையும் நூற்றாண்டையும் கடந்து வாழும்.... சூப்பர் ... லூசு தனமா இருந்தாலும் இதெல்லாம் வரும்யா.. ஹிஹி //
உண்மைதாங்க, எதற்கு முன் ஏதோ ஒரு கவிதையில்
மதுவில் கரையும் ஐஸ் கட்டியென
என்று ஒரு படிமம் கையாண்டிருப்பேன், காதலுக்காக
மது காதல்
ஐஸ் கட்டி காதலில் விழுந்தவர்
கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து ஐஸ்கட்டி மதுவில் கலக்கும், முழுமையாக கரைந்த பிறகு ஐஸ் எது மது எது என்று தெரியாத வகையில் ஒன்றாகிவிடும்
காதலும் அப்படித்தான் இல்லையா ?
Title: Re: காதல்
Post by: ஆதி on September 18, 2012, 03:32:31 PM
//superb aadhi.. நினைவின் புள்ளிகள் வளர்ந்து நிலவாய் பிரகாசிக்கும்.
விரும்பிய பாதையில் விழுவது பூக்களோ ? சருகுகளோ? பெருகும் ஞாபகங்கள் கொண்டு நூற்றாண்டையும் நூற்றாண்டையும் கடந்து வாழும்....
romba romba nalla iruku..
//
ரொம்ப நன்றிங்க அக்கா, எனக்கு மிக பிடித்த வரிகள்
சென்னையில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த ஒரு காலை ரயில் பயணத்தில் எழுதிய கவிதைங்கக்கா இது
கிட்டத்தட்ட இந்த கவிதை எழுதி ஒரு 7 வருடமிருக்கும்
Title: Re: காதல்
Post by: Thavi on September 19, 2012, 02:08:55 AM