FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 17, 2012, 11:12:35 AM
-
அன்பே !
ஆண்டுகள் பல
உருண்டோடிவிட்டது
நீயும் நானும் பேசத்துவங்கி
பேசினோம் , பேசினோம்
பேசுகின்றோம், பேசுகின்றோம்
இனியும் இனிக்க,இனிக்க
பேசுவோம்,பேசுவோம்
உண்ண,உண்ண
அன்னம் அது குறையாதது
அட்சய பாத்திரமாம் ,
பேச பேச ஆசையே தீரலையே
நீயும் என்ன ,
பேசும் அட்சயபாத்திரமோ ?
பழக பழக பாலும் புளிக்குமாம் ?
பருக பருக தேனும் திகட்டுமாம் ?
பேச பேச திகட்டுவதில்லையே ?
அட , திகட்டுவதிருக்கட்டும்
திகட்டுவதாய் தோன்றவும் இல்லையே !
உன் நினைவுகளுக்கு தான்
எத்தனை இனிமையடி !
எத்தனை வலிமையடி !
-
உண்மை அன்பும் ..நேசமும் ..பாசமும் ..காதலும் ..
என்றும் என்றென்றும் ..
திகட்டாத இனிப்பாய் ...வாடாத மலர்போல்
மனதில் நிறைந்தோடும் ..
பசுமை நினைவுகள் ...
-
உண்ண,உண்ண
அன்னம் அது குறையாதது
அட்சய பாத்திரமாம் ,
பேச பேச ஆசையே தீரலையே
நீயும் என்ன ,
பேசும் அட்சயபாத்திரமோ ?
உன் நினைவுகளுக்கு தான்
எத்தனை இனிமையடி !
எத்தனை வலிமையடி !
arumaiyaana varigal ajith.
romba nalla iruku ajith.
-
VAAZHTHU VAZHANGIYA VAANAVILGALUKKU VAAANALAAAVIYA NANDRIGALL !!!