FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 14, 2012, 08:05:02 PM
-
நாளொன்றிற்கு இரண்டு முறை வீதம்
குளித்து வந்தவன் - இன்றோ
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
வீதம் குளிக்கின்றேன்
மற்ற நேரங்களில், ஒற்றை ஒற்றையாய்
வரும், அவள் நினைவுகள்
அந்த நேரத்தில் மட்டும்
குபீரென கூட்டமாய் வந்துவிடுவதால் ...