FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on September 14, 2012, 05:11:02 PM

Title: உயிர்வாங்கி
Post by: Global Angel on September 14, 2012, 05:11:02 PM
தென்றல் அவிழ்ந்து
தன்னிலைக்கு
திரை போட்டவண்ணம் 
எண்ண கதவுகளை தட்டி திறக்கின்றது
வண்ணப் புள்ளிகள் வாய்த்த கோலங்களும்
வருத்த புள்ளிகள் தோய்ந்த சோகங்களும்
முண்டியடித்து முன்னே வர
சடுதியில் முன்னிலை
வருத்தம் தோய்ந்த சோகங்களுக்கே ...


கைப்பிடி அளவு இதயம்
அதில் கடுகளவும் இடமில்லாது
பெருமளவு இடத்தை பிடித்தாய்
பட படவென கற்பனையில்
காதல் தாஜ் மகாலை
சாஜகனுக்கு நிகராய்
என் மன பிரதேசத்தில் கட்டி முடிதேனடா ...


கொலுவாக உன்னை வைத்தேன்
வலுவாக அதில் என்னை தைத்தேன்
பதிலாக நீ உன்னை தந்தாய்
பலகாலம் என் உயிரை மேய்ந்தாய்
மேய்ந்தாலும் வளர்ச்சி
மிருதுவாய் இருந்தது
சாய்ந்தாடும் உணர்ச்சி
சடுதியாய் வந்தது
பாய்ந்தோடி உன்
பருவத்து ஆசைக்கு
விருந்தாடி மகிழ்ந்தேன்
வினையாகி போகுமென்று
எள்ளளவும் எண்ணாது
மருந்தாகி மகிழ்ந்தேன் ...


பாசத்தில் நீ சளைத்தவனில்லை
நேசத்தில் நீ குறைந்தவனில்லை
தாகத்தில் நீ தளர்ந்தவனில்லை
என் மீது மோகத்தில் நீ  சளைத்தவனில்லை
இருந்தும் உன் வாழ்க்கைக்கு
நான் உகந்தவள் ஆகாது போனேனே ..


தென்றலும் தீண்டும் நிலை தெரியாது
திக்கி திணறுகின்றது
முந்தானை மடிப்புகளில்...
மூச்சு காற்றின் அனல் வீச்சில்
முனு முணுக்கும் கொசுக்கள் கூட
முனகல் மறந்து முறைத்து செல்கிறது ...
இதய சதுக்கத்தில்
உன் நினைவுகள் பிறழ்ந்து தவழ்கின்றது ..
தழுவிடும் உன் கரங்களுக்காய்
தவியாய் தவித்திடும் என் வனப்பு
மறியல் போராட்டம் செய்கிறது
மனதை மறித்து ...

ஏன் ...
பிறளாத உந்தன் காதல்
மருளாத எந்தன் நேசம்
மணல் வீடாகி கரைந்தது ஏன்?
 
ஒஹ் தாஜ் மகாலில்
உன்னை தரையிறக்கம் செய்ததாலா ...
பல உயிர்களை பலிவாங்கி
உலக சரித்திரத்தில் இடம் பிடித்த
ஒரு கல்லறையின்..
காதல் கல்லறையின் சரிதிரமல்லவா ..
அதனால்தான் நம் காதல்
என் உயிர்வாங்கி
அங்கு வாழட்டும் என்று விட்டு விட்டாயா ?

வாழ்வேன்
கல்லறையிலும் கருவறைகளில்
உன் நினைவலைகளை சுமந்தவண்ணம் ...
Title: Re: உயிர்வாங்கி
Post by: ஆதி on September 14, 2012, 05:36:15 PM
மனதில் கோசத்தையும் வலிகளையும் வெறுமையையும் தனிமையையும் கொட்டி சென்றுவிட்டது கவிதை, என்ன பின்னூட்டமிட எண்ண ஓட்டமில்லாமல்
Title: Re: உயிர்வாங்கி
Post by: Global Angel on September 14, 2012, 06:29:11 PM
  ;D அட உங்களையே ஸ்தம்பித்து நிக்க வைத்து விட்டேனா ... நன்றி ... வார்த்தை பிரயோகங்கள் சரியாக இருகின்றனவா கருத்து இவைகள் பற்றி ஏதாவது சொல்லமே