FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 14, 2012, 02:58:44 PM

Title: உன்னாலே உன்னாலே ...
Post by: aasaiajiith on September 14, 2012, 02:58:44 PM
தன்னைவிட எழில்நிறைந்த
உயர் கவிக்காக
ஓர் உயிர் கவிக்காக
சரமாக்கபடுவதை எண்ணி
சிலகாலமாய்
தாழ்வுமனப்பான்மையில்
தவித்து வந்த
என் கவிதைகள்


தினம் தினம் தவறாது
கவிதைகளை  நீ
தரிசிப்பதாலும்
வாசித்து ரசிப்பதனாலும்

இப்பொழுதெல்லாம்
கடும் தலைக்கனத்துடன்
திரிகின்றன ...