FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 14, 2012, 02:33:53 PM

Title: இல்லாது போமோ இரக்கம் ??
Post by: aasaiajiith on September 14, 2012, 02:33:53 PM
மௌனத்தை மௌனிப்பவன் நான்
உன் மௌனத்தையும்
மௌனமாய் ரசித்தவன் தான்
இன்று ஏனோ ?
உன் மௌனம்
எனக்குள் தீமூட்ட தொடங்கியது ??
வாய் வார்த்தை வேண்டி, 
வாசகம் கூட அனுப்பாதவன்
உன் மெளனத்திற்க்கு,
வகைவகையாய்
வார்த்தையிட்டும்,
வாக்கியமிட்டும்   
வாயார வாசிக்கின்றேன் ,
வாசித்து
உன் வசீகரக்குரலின் இனிமையது
அப்படி எப்படி இருக்குமென
மனதோடு யோசிக்கின்றேன் ?
ஆளான நாள் முதலாய்,
அவளழகை
அணைத்தபடி மறைத்துவரும்
ஆடைக்கே,
அவ்வப்போது  இறக்கம் உண்டு
இந்த ஆசைக்கு
இல்லாமலா  போகும் இரக்கம் ?