FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 14, 2012, 11:11:18 AM

Title: இரண்டு கவிதைக‌ள்
Post by: ஆதி on September 14, 2012, 11:11:18 AM
பெருமதில்களால் நிர்மானிக்கப்பட்ட‌
அரண்களை கடந்து
எவராலும் நுழைந்துவிட முடியாது
உம் மனத்திற்குள்
சமயத்தில் உங்களாலும் கூட‌

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================

புன்னகையின் நிழலில்
இளைப்பாறிவிட்டு
புரப்படுகையில்
பயணத்தில் உண்டாகிற
தாகத்திற்கு வேதைப்படுமென்று
மொண்டு கொள்கிறாயோ
கொஞ்சம் எனது கண்ணீரை