FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 14, 2011, 02:38:57 PM

Title: சிறகுகள்
Post by: JS on August 14, 2011, 02:38:57 PM
சிறகுகள் தேடி அலைந்தேன்
என் சிறகே நீயானாய்
மலைகளை கடந்தேன்
கொட்டும் மழையானாய்...

வாடி போகும் முன்னே
பறித்து விடு என்னை
முள்ளில்லாத மலராய்
காப்பேன் உன்னை...

கொட்டுகின்ற பனியாய் நான்
எட்டி நிற்கும் வானமாய் நீ
ஓடுகின்ற நதியாய் நீ
உன் வருகையை எதிர்பார்க்கும்
ஓடமாய் நான்...

நீரடித்து ஒதுங்கவில்லை
மலரடித்து சிணுங்கினேன்
வெள்ளோட்டமாய் ஓடினேன்
உன் கலர் கனவுகள் காண...

Title: Re: சிறகுகள்
Post by: Global Angel on August 15, 2011, 01:27:48 AM
Quote
வாடி போகும் முன்னே
பறித்து விடு என்னை
முள்ளில்லாத மலராய்
காப்பேன் உன்னை
...


nice one ;)