FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 13, 2012, 05:59:48 PM
-
வளர்த்த ஆடுகளும் கோழிகளும்
வயதாகி பேரன் பேத்தி எடுத்திருக்குமோ
எங்காவது ஒரு சந்தையில் காசாகவோ ?
ஏதாவது ஒரு விருந்தில் கறியாகவோ
ஆக்கப்பட்டிருக்குமோ ?
வளர்த்த செடிகளுக்கும் கொடிகளுக்கும்
என் ஸ்பரிசமும் வாசமும்
நினைவிருக்குமோ ? இருக்காதோ ?
இல்லை அவைகளே
தடமின்றி சுவாசமிழந்திருக்குமோ ?
என் முகத்தோடான பரிச்சயம்
அண்டைவீட்டுக்காரர்களுக்கு இருக்குமோ ?
அல்லது
ஐயத்தோடான பார்வையை
என் புன்னகைக்கு பதிலளிப்பார்களோ ?
கூரைவீடெல்லாம்
காரைவீடாகி இருக்கிறது..
பிழைப்புக்கு வெளியூர்
பெயர்ந்தவர்களின் வீடுகள் சில
பாழடைந்து கிடக்கிறது..
ஒரு புறம் தென்னையும்
மறுப்புற வயலும் அணி வகுத்த
ஒற்றையடிப்பாதை
தார்ப்பாதையாகி
தென்னையும் வயலும் இல்லாத
வெயில் பாதையாகி இருக்கிறது..
வயலில் வெள்ளை மொட்டுக்களாய்
பூக்கிற கொக்குகள் எல்லாம்
எந்த திசையில் திரிகின்றனவோ ?
அவைகளுக்கு இரையாகிற
தவளைகளும் மீன்களும்
எங்கு ஜீவிக்கின்றனவோ ?
என்னதான் வெளிநாடு சென்று வந்தாலும்
'பஞ்சம் பிழைக்க' என்பதுதான்
சரியாக பொருந்துகிறது..
போனவையோடு போனவை பல
வந்த போதும் இழந்திருப்பவை பல
எனினும்
மீண்டும் போக வேண்டும் என்பதில் தான்
கவனமாக இருக்கிறது புத்தி..
எனக்காக இல்லாவிடினும்
யார் யாருக்காகவோ
-
உண்மைதான் ஆதி ... உண்மையான நிலைமை இதுதான் ... தனக்காக வாழ்வதை விட பிறர்க்காக வாழ்வது புலம் பெயர்பவர்களின் கடமை ஆகி போனது இதிலே கொடுமை என்னவென்றால் .... பெற்றவர்களுக்கே பிள்ளை முகம் மறந்து போகின்றது .... வந்தவனை வா என்று கூபிட்டு உபசரித்த அடுத்த கணமே எப்போ தம்பி திரும்பி போறே ... இப்படிதான் கேட்கின்றார்கள் .. அவன் பணத்தில் உடம்பு வளர்த்து ஓலகி போனவர்களாச்சே... நம் நாட்டில் இல்லாதது எங்கே இருக்கிறது ... அக்கரைகள் பச்சை இல்லை ..
-
உண்மைதாங்க, நன்றிங்க