FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on September 13, 2012, 01:48:55 PM

Title: என்னை நான் இழக்கிறேன்
Post by: !! AnbaY !! on September 13, 2012, 01:48:55 PM
மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிரே
பழசெல்லாம் நினைவுக்கு வருதே
வான் என்று உன்னை நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே

கண் மூடினால் இருள் ஏது? நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக நீ தானே வருகிறாய்

எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்  நினைவுகளாலே மோதி என் இதயம் உடைக்கிறாய்
உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய்
என் உயிரே  உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
தண்ணீரில் குமிழியை போல  வந்து மறைந்தாய்
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகிடுதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
இனி முழுவதும் நான் அழுவதும் உன்னை நினைத்தே 

நான்  எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் உயிரே  உனக்காக கிடக்கிறேன் !! என் உயிரே
கரைகிறேன் உன் நினைவிலே
என்னை  இழக்கிறேன் என் உயிரே !!!-உன் நினைவாலே
என்னை நான் இழக்கிறேன்!!!
Title: Re: என்னை நான் இழக்கிறேன்
Post by: ஆதி on September 13, 2012, 06:08:31 PM
சொற்கட்டு, வார்த்தைநயம் நன்றாய் இருக்கிறது

//கண் மூடினால் இருள் ஏது? நீயே தெரிகிறாய் //

இது போதாதா இந்த கவிதையை பாராட்ட, எவ்வளவோ யோசிக்க வைத்த வரிகள்

வாழ்த்துக்கள்
Title: Re: என்னை நான் இழக்கிறேன்
Post by: !! AnbaY !! on September 15, 2012, 11:53:18 AM
thanks nanba !!
Title: Re: என்னை நான் இழக்கிறேன்
Post by: Anu on September 18, 2012, 06:17:16 AM
nice kavithai anbay.
romba naal kalichi unga kavithai pathivu seidhu irukinga.
nice nice..