FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 12, 2012, 05:14:57 PM
-
உன் நினைவினில் நிதம் மூழ்கி
உனக்காக கவி பாட
வடிக்காத வார்த்தை தேடி
நடக்காத நடை நடந்து
கடக்காத நதி கடந்து
மடிக்காத வலை (வார்த்தை ) வீசி
பிடிக்காத பொன் வரிகளை பிடித்து
துடுக்கான கவி படைத்த மமதையில்
மிடுக்காக நடை நடந்து வந்து
திடுக்கென உன்னிடம் கவி பாடினால்
சொடுக்கிடும் நொடி பொழுதினில்
விடுக்கென நாண் ஏற்றிய அம்பு போல்
வெடுக்கென வெளிப்படும் பொழுது
கடிக்காத ஆப்பிள் போல கன்னங்கள்
கிடுக்கென சிவக்க செய்திடும் நாணம்
உன் வெட்கத்தின் வெளிப்பாட்டாலோ ?
இல்லை, இதோ
நான் வடித்திருக்கும் கவி பட்டாலோ?
உறக்கமின்றி வாடி வடித்த மனதை
இரக்கமின்றி சாடுகின்றது
உனக்காக வடித்த வரிகள் .....