FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 12, 2012, 01:35:00 PM

Title: சூஃபி கவிதைகள்
Post by: ஆதி on September 12, 2012, 01:35:00 PM
விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..
Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: Global Angel on September 12, 2012, 01:48:14 PM
மௌன மொழிகளாய்...




சிறு கவிதையில் அருமையான வெளிப்பாடு
Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: ஆதி on September 12, 2012, 06:03:56 PM
நன்றிங்க‌, இன்னும் கவிதைகள் இருக்கு, தொடர்ந்து பதிக்கிறேன்
Title: Re: சூஃபி கவிதைகள் - 2
Post by: ஆதி on September 13, 2012, 05:40:09 PM
நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் உள்ளது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்கப்படாமல் இருக்கிறது மௌனம்
Title: Re: சூஃபி கவிதைகள் -3
Post by: ஆதி on September 21, 2012, 02:29:51 PM
நெடிதாகிறது பயணம்
நீ எங்கும் காணவில்லை
துவங்கிய இடத்திற்கே
துவண்டு வந்துவிட்டேன்
எனக்காக நீ அங்கு காத்திருந்தாய்
என்னை கண்டதும் எழுந்து நடக்கிறாய்..
Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: Anu on September 25, 2012, 12:07:24 PM
arumaiyaana kavithaigal aadhi.
Romba naal ah padikanumnu aasai sufi poems.
thamizhaakam seidhu alitthamaiku nandri aadhi.

Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: ஆதி on September 25, 2012, 12:09:42 PM
அக்காவ், இது என் சொந்த கவிதைதள்

தமிழாக்கம் செய்த கவிதைகளை இன்னும் பதிக்க ஆரம்பிக்க வில்லை அதை தனித்திரியில் பதிவிடுகிறேன்

நன்றிங்க அக்கா
Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: Anu on September 25, 2012, 12:20:08 PM
அக்காவ், இது என் சொந்த கவிதைதள்

தமிழாக்கம் செய்த கவிதைகளை இன்னும் பதிக்க ஆரம்பிக்க வில்லை அதை தனித்திரியில் பதிவிடுகிறேன்

நன்றிங்க அக்கா
sufi kavithai pottu irukinga thalaipula.
adaan sufi kavithaiyin thamizhaakkam nu nenachen aadhi:)
pathiyunga nanga payanadaiyarom :)
Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: ஆதி on September 25, 2012, 12:28:40 PM
சூஃபியின் அடிப்படை தத்துவங்களை வைத்து பிண்ணிய கவிதைகள் அக்கா, அதனால் தான் அப்படி தலைப்பிட்டேன்
Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: Anu on September 25, 2012, 12:29:45 PM
சூஃபியின் அடிப்படை தத்துவங்களை வைத்து பிண்ணிய கவிதைகள் அக்கா, அதனால் தான் அப்படி தலைப்பிட்டேன்
miga arumaiyaaga iruku aadhi:)
Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: ஆதி on September 25, 2012, 12:32:31 PM
ரொம்ப நன்றிங்க அக்கா

புத்தனை வைத்து ஒரு தொகுப்பு எழுதனும் என்று விருப்பம், இதுவரை 16 கவிதை எழுதி வைத்திருக்கிறேன்

இன்னும் கொஞ்சம் எழுத வேண்டும்

விரைவில் மன்றத்தில் பதிக்கிறேன்

Title: Re: சூஃபி கவிதைகள்
Post by: Global Angel on September 25, 2012, 01:10:29 PM
என் வழியில் சூஃபியின் சிந்தனைகள் என தலைப்பிடலாமே ஆதி .. நான் கூட இவை உங்கள் சொந்த கவிதை அல்ல என்று நினைத்தேன்