FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 12, 2012, 01:19:39 PM

Title: காதல் - ‍‍தேவதைகளும், சாத்தான்களும் - 1
Post by: ஆதி on September 12, 2012, 01:19:39 PM
உன்னுளிருந்து
யோர்தானென‌
பீறிட்டு வெளிப்பரவிய‌ நதியில்
மூழ்கியெழுந்தேன்

அப்பொழுது தன் வானத்தை திறந்து
காதல் சொன்னது
இவளே உன் அன்புக்குரியவள்
இவளை பின் தொடந்து கைகொள்
நித்ய வாழ்வை அடைவாய்
Title: காதல் - ‍‍ தேவதைகளும், சாத்தான்களும் 2
Post by: ஆதி on September 12, 2012, 01:20:08 PM
ஏதோ ஒரு மிருகத்தின் வாயில் சிக்கி
அரைகுறை உயிரோடு
ஊசலாடிய தருணத்தில்
எங்கிருந்தோ வந்த இன்னும் சில மிருகங்கள்
பீய்த்து பிடுங்கின என் மாமிசத்தை
ஒவ்வொரு சொட்டாய்
மீதமிருந்த உயிரும்
பார்வை மங்கிய விழிவழி வடிகையில்
உன்னை பார்த்தேன்
மிக சாந்தமாய் அமர்ந்து நீ
கலையை ரசிப்பது போல்
நான் கொல்லப்படுவதை
ரசித்துக் கொண்டிருந்தாய்
கருணைப் பொங்கும்
தேவதையின் கண்களுடன்..
Title: Re: காதல் - ‍‍தேவதைகளும், சாத்தான்களும் - 1
Post by: Global Angel on September 12, 2012, 01:46:04 PM
Quote
அப்பொழுது தன் வானத்தை திறந்து
காதல் சொன்னது
இவளே உன் அன்புக்குரியவள்
இவளை பின் தொடந்து கைகொள்
நித்ய வாழ்வை அடைவாய்


காதல சாத்தான் என்று சொல்லுறீங்களோ 



Quote
ஏதோ ஒரு மிருகத்தின் வாயில் சிக்கி
அரைகுறை உயிரோடு
ஊசலாடிய தருணத்தில்
எங்கிருந்தோ வந்த இன்னும் சில மிருகங்கள்
பீய்த்து பிடுங்கின என் மாமிசத்தை
ஒவ்வொரு சொட்டாய்
மீதமிருந்த உயிரும்
பார்வை மங்கிய விழிவழி வடிகையில்
உன்னை பார்த்தேன்
மிக சாந்தமாய் அமர்ந்து நீ
கலையை ரசிப்பது போல்
நான் கொல்லப்படுவதை
ரசித்துக் கொண்டிருந்தாய்
கருணைப் பொங்கும்
தேவதையின் கண்களுடன்..




இந்த கவிதையை பார்க்கும்பொழுது எனக்கு பல கற்பனை தோன்றுது ... ஒரு காதலி தன் காதலனை கொடுமை படுத்துவது போன்றும் ... ஓர் பிரியமான ஒரு நபரை அன் நபரால் விரும்பப்படும் ஒருவர் அது யார்வேண்டுமானாலும் இருக்கலாம் வதைப்பது போன்றும் தோன்றுகிறது

அருமை ஆதி
Title: Re: காதல் - ‍‍தேவதைகளும், சாத்தான்களும் - 1
Post by: ஆதி on September 12, 2012, 01:50:27 PM
நீங்கள் சொல்வது சரிதாங்க‌

இந்த கவிதையின் தலைப்பு சொல்வது போல் காதல் சாத்தானாகவும் இருக்கு தேவதையாகவும் இருக்கு

நான் காதலை சாத்தான எண்ணி படித்தால் இந்த கவிதை சாத்தானை பற்றி சொல்லும், தேவதையாக எண்ணீ படித்தால் இந்த கவிதை தேவதைய பற்றி சொல்லும் :)

இரண்டு கோணத்தில் எழுதினேன்
Title: Re: காதல் - ‍‍தேவதைகளும், சாத்தான்களும் - 1
Post by: Global Angel on September 12, 2012, 01:56:58 PM


இதுதான் கல்ல கண்டா நாய கானம் , நாய கண்டா கல்ல கானம் என்றதா
 ;D