FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on September 12, 2012, 01:56:19 AM
-
விழுந்து எழும்பியும்
விழுந்ததுக்கு விஞ்ஞான விளக்கம்
விவரமானவன்னு ஊர் சொல்லிச்சு ...
சாப்பாட்டுக்கு வழி இல்லை
சகபாடியும் உதவவில்லை
சந்தில் இருந்த சாப்பட்டுகடையில்
சால்னாக்கு துட்டில்லை
சாயாவும் ஒரு ரொட்டியும் சாபிட்டான்
டயட் உடலை கட்சிதமாய்
பார்க்கின்றான் என்று ஊர் சொல்லிச்சு ...
எங்கு சென்றாலும்
குனிந்த தலை நிமிராத
குலமகனாய் சென்று வந்தான்
பெண்பிரசு பேச்சுமில்லை
பிறர் பெண்டிர் நாட்டமும் இல்லை
காசு இருந்தால்தானே களியாட்டம்
கன்னிகள் கூட்டம்
புரிந்தவன் குனிந்தான் - கண்ணியவான்
ஊர் சொல்லிச்சு ...
சும்மாவே உக்காந்து
சுகத்தை அனுபவித்து
சுதந்திரமாய் நடந்தவனை
ஒரு குரல் கேட்டது ...
தம்பி சும்மா இருப்பது
உனக்கு சுகமாய் இருக்குதா......?
சுருக்கமாய் சொன்னான்
நீயும் சும்மா இருந்து பார்
சும்மா இருபதின் கஷ்டம் சுகமா புரியும் என்றான் ...
வாஸ்தவம் என்று ஊர் சொல்லிச்சு ...
அவனை கெடுத்து அவனல்ல ஊர்
அது உன்னையும் கெடுக்கும்
உலகையும் கெடுக்கும் ...
புகழ்ச்சிக்கு இடம் கொடுத்து
உனக்குள் இருக்கும்
முயற்சிகள் தூங்கிவிட்டால் ...
-
Summa irukarathu unmaiyileye kashtamnga :)
Nallaruku kavithai
-
thanks gotham :D
-
//சாப்பாட்டுக்கு வழி இல்லை
சகபாடியும் உதவவில்லை
//
இரண்டு வரிகளில் கதை சொல்லிவிட்டீகள்
//சும்மாவே உக்காந்து
சுகத்தை அனுபவித்து
சுதந்திரமாய் நடந்தவனை
ஒரு குரல் கேட்டது ...
தம்பி சும்மா இருப்பது
உனக்கு சுகமாய் இருக்குதா......?
சுருக்கமாய் சொன்னான்
நீயும் சும்மா இருந்து பார்
சும்மா இருபதின் கஷ்டம் சுகமா புரியும் என்றான் ...
வாஸ்தவம் என்று ஊர் சொல்லிச்சு ...
//
உண்மை, அவனவன் வலி அவனவனுக்குத்தான் தெரியும்
உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் வாழ்க்கை ரனகளமா ஆய்டுதுனு சொல்றீங்க
நானும் கூட சும்மா பற்றி முன்பு ஒரு கவிதை எழுதியிருந்தேன்
சும்மா இருப்பது
சும்மா இல்லையென்று
-
ஹஹா நன்றி ... இப்போ நான் சும்மா இருக்கேனா அதுதான்
;D ;D ;D ;D