FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 11, 2012, 11:52:30 PM
-
கொட்டிக் கிடக்கிற
கோடி மலர்களில்
எனக்குப் பிடித்தது
உன்னை மட்டும்தான்..
நிலா கல்வெட்டில்
நான் வடிக்க நினைப்பது
உன் அழகைத்தான்..
"உன்னைக் காதலிக்கிறேன்" என
என் காதலை
பிரகடனப் படுத்தியும்
ஒரு பதிலும் இல்லையே..
காதலி.
உன் இதழ்களில்
எனக்காக நீ
மிச்சம் வைத்திருப்பது
மௌனத்தை மட்டும்தானா ?
வண்ணத்திப் பூச்சிகளாய்
உன் நினைவுகள்
என்னை வட்டமிடுவது
என் கண்ணீரைக் குடிக்கவா ?
என் காதல்
நந்தவத்தின் விலக்கப்பட்ட கனி
நானா ?
உன் இதயத்தைப் போல்
என் காதலுமா
புரிந்துக் கொள்ள
முடியாத ஒன்று ?
உனக்கு தெரியாது..
உனக்குள் இருந்துதான்
காதல் என்னைப்
பார்த்தது..
உன்னை எழுதிய பிறகுதான்
என் கவிதைகள்
கௌரவப்பட்டன..
ஆகையால்தான்
என்னைக் காதலிப்பதில்லை
என நீ
எப்படி உறுதியாய் உள்ளாயோ
உன்னைக் காதலிப்பதில் நான்
அப்படி தெளிவாய் உள்ளேன்..
பாலைவன மழைப் போல
கேள்விக்குறியாய் உள்ள
உன் காதலுக்காய்
என் உயிரை அழவிடுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை..
உயிருக்கு வெளியேப்
போகிறேன்..
உலகத்தை துறந்து சாகிறேன்..
உனக்கு நேரமிருந்தால்
உன்னால் இயலுமானால்
ஒரு முறை
என் கல்லறைக்கு
வந்து போ..
அழு அல்லது
சிரி
தயவு செய்து
அங்கும் மௌனமாய்
இருந்துவிடாதே..
எதாவது ஒன்றில்
தொடுகை என்
சாமதியை
சமாதானப் படுத்தும்..
-
:'(
மிகவும் உள்ளத்தை உருக்கும் வரிகள் ஆதி ....காதலிப்பதை விட காதல் சோகம் சுகமும் வேதனையும் மிக்கது என்பது உங்கள் கவிதையில் தெரிகின்றது ...ஆனால் கலரை என்பது முடிவாகலாமா
-
முடிவில்லைதான்..
இந்த கவிதை கல்லூரியில் படிக்கையில் எழுதியது, நண்பர்கள் சிலர் முதல் பத்தியை தம் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார்கள்
அன்றிருந்து சிந்தனை அவ்வாறு இருந்தது, காலம் எல்லா மாற்றத்தையும் பக்குவத்தையும் தரவல்ல ஆசானில்லையா?
பின்னூட்டத்துக்கு நன்றிங்க