FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 11, 2012, 11:46:34 PM
-
மீண்டும் நம் சந்திப்புகள்
நிகழ்ந்த போது
மௌனம் காத்தன இதழ்கள்
பேசிக் கொண்டன மனங்கள்
நீயும் நானும்
சொல்லாத காதலை..
இந்த கவிதையை வாசித்துவிட்டு
என் தோள்களில் சாய்ந்து கொண்டாய்..
உனக்கான என் எல்லா கவிதைகளையும்
வாசிக்க சொன்னாய்..
நான் வாசிக்க வாசிக்க
கொஞ்சம் கிறங்கினாய்
கொஞ்ச தழுவினாய்..
கண்ணீர் இமைகளை
விஞ்ச ததும்பினாய்..
ஒவ்வொரு கவிதைக்கும் பித்தம் உற்றாய்
காற்புள்ளி அரைப்புள்ளி இடைவெளிகளில் முத்தம் தந்தாய்..
காகிதங்களை திருப்புகையில் நெருக்கமானாய்..
எழுத்துக்களில் மட்டுமல்ல
எழுத்துக்கும் எழுத்தும் இடையிலும்
நீதான் இருக்கிறாயென வாசிக்கையில்
நம் இதழுக்கும் இதழுக்கும் இடையில் இடமில்லை..
அப்போது..
உன் இமைகள் இறங்கி
மீட்டிக் கொண்டிருந்தது ஒரு கவிதையை..
நம் இதழ்களுக்குள் சிக்க
மீட்க ஆளில்லாமல்
தவித்துக் கொண்டிருந்தன வார்த்தைகள்..
-
இது உங்கள் சொந்த அனுபவமா ... சொந்த அனுபவம் போன்றே எழுதி இருகின்றீர்கள் ... பெண்கள் எப்பவும் இலகுவில் மதி மயங்கி விடுவார்கள் ...ஆண்கள் பொய்காரர்கள் என்பது தெரிந்துமே
-
இல்லைங்க, ஒரு கவிதையை வாசித்துவிட்டு எழுதிய பின்னூட்ட கவிதை
கவிதை எழுதியவர் கடுப்பாகிட்டார், வாசிச்சவங்க எல்லாம் என் கவிதையை பாராட்டியதால்
-
;D ;D ;D ;D ;D pinnoodam panna sonna:D poddu thaakitinga kobam varama enna varum :D
-
ஹி.. ஹி..
அதனாலத்தான் இப்போதெல்லாம் பின்னூட்ட கவிதைகள் எழுதுவதே இல்லை