FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on September 11, 2012, 02:03:43 PM
-
மழையை
வரையச் சொன்னேன்
சுற்றிக் கிடக்கும்
வண்ணப் பென்சில்களை
தொடாமல்
சொன்னாள் குழந்தை
மழையை வரைய
மழை வேண்டும்
- ராஜா சந்திரசேகர்
-
தமிழில் வெகு நாட்களாக கவிதை தளத்தில் இயங்கி வரும் பழம்பெரும் கவிஞர் ராஜா சந்திரசேகர்
சின்ன சின்ன கவிதைகளில் பெருயானை போன்ற கருத்துக்களை சொல்வதில் வல்லவர்
வண்ண பென்சில் கொண்டு வரைவதால் மட்டும் மழை அழாகிவிடுவதில்லை
செயற்கையான எதுவும் அழகில்லை, இயற்கையே அழகு
நான் அடிக்கடி மனசுக்குள் சொல்லிக் கொள்ளும் அவரின் கவிதை ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்
அதுவாகத்தான் இருக்கிறது
ஆமை நாம் தான்
மெதுவாக என்று
குறியீடு சொல்கிறோம்
-
Raja sekar kavithai first time padikiren. short n sweet ah azhaga theliva solli irukar.
kavithaikaana unga vilakkam miga arumai aadhi.