FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on September 10, 2012, 10:27:34 AM

Title: நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுவதை குறைக்க முடியலையா?
Post by: kanmani on September 10, 2012, 10:27:34 AM
எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அவ்வாறு சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஆரோக்கியமானவை மற்றும் ஆரோக்கியமற்றவை என்று இருக்கின்றன. இப்போது டயட்டில் இருக்கும் போது வறுத்த ஸ்நாக்ஸ்களை எப்போதும் சாப்பிடக் கூடாது. இதனால் எடை தான் அதிகரிக்கும். ஸ்நாக்ஸ்களில் பல வகைகள் இருக்கின்றன. மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை அதிகமாக சாப்பிட்டால், டயட் தான் பாதிக்கப்படும். மேலும் கண்ட கண்ட நேரங்களிலும் சாப்பிடக் கூடாது. அவ்வாறு அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். மேலும் தேவையான அளவு உணவு சாப்பிட முடியாமல், பின்னர் அடிக்கடி பசி எடுக்க ஆரம்பிக்கும். ஆகவே இத்தகைய ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்த ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், எப்போதுமே எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்போது மதிய வேளையில் உணவு உண்டு, 1/2 மணிநேரத்திற்குப் பின் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அதை முற்றிலும் விட வேண்டும். ஏனென்றால் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், அது உங்களது டயட்டை வீணாக்கும். ஆகவே எப்போது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று ப்ளான் செய்ய வேண்டும். உதாரணமாக, ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்றால், காலையில் 11am-ல் இருக்க வேண்டும். அதுவே மாலை என்றால் 5-7pm ஆக இருக்க வேண்டும். இதனால் வயிற்றில் சரியான செரிமானம் நடைபெற்று, உணவு சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும்.

* எளிதான உணவுகளை உண்டால் எளிதில் செரிமானமடைந்துவிடும். அதனால் தான் விரைவில் பசியெடுக்கிறது. உதாரணமாக, குறைவாக சாதம் சாப்பிட்டால், 2 மணிநேரத்தில் செரிமானமடைந்துவிடுகிறது, அதனால் தான் பசியெடுக்கிறது. ஆனால் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளான ப்ரௌன் அரிசி, ஆப்பிள், பாஸ்தா போன்றவைகள் சாப்பிட்டால் எளிதில் செரிமானமடைவதோடு, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, உடலில் எனர்ஜியும் அதிகரிக்கிறது. வேகமாக பசி எடுப்பதற்கு, உடலில் உள்ள எனர்ஜியின் அளவு குறைவாக இருப்பதனாலேயே, விரைவில் பசி எடுக்கிறது.

* புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், பசி எடுப்பதை தவிர்ககலாம். ஏனெனில் புரோட்டீன் உணவுகளை சாப்பிட்டால், வயிறு நிறைந்தது போல் இருப்பதோடு, உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. ஆகவே காலையில் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, சிக்கன், கொண்டை கடலை போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவை நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் தேவையற்ற நேரங்களில் உண்ணும் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிட முடியாத அளவு செய்யும்.

* ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அப்போது ஆரோக்கியமற்றவைகளை சாப்பிடுவதை விட, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஸ்நாக்ஸ்களான நட்1, பழங்கள், பாதாம், ஆப்பிள், ஆப்ரிகாட், ஆரஞ்சு போன்றவைகளை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதை விட்டு, வறுத்த, அதிக கலோரிகள் இருக்கும் உணவுகளான பர்க்கர், பிரஞ்சு ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவைகளை சாப்பிட்டால், உடல் தான் பாதிக்கப்படும்.

ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிடும் போதெல்லாம், மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, பின் அதனை சாப்பிடுவதா, வேண்டாமா என்று நீங்களே முடிவெடுங்கள்...