FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on September 10, 2012, 10:24:29 AM

Title: உடல் நல்லா ஸ்ட்ராங்கா இருக்க, எந்த உணவுகளை சாப்பிடலாம்!!!
Post by: kanmani on September 10, 2012, 10:24:29 AM
இன்றைய அவசர காலத்தில், நிறைய பேர் எதையும் சரியாக உண்ண முடியாத நிலையில் உள்ளனர். அவ்வாறு இருப்பதால், அவர்களது உடல் நலம் பலமிழந்து ஆரோக்கியமற்றதாக உள்ளது. ஆகவே அவ்வாறு இருப்பவர்கள், சாதாரண நேரத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை விட, ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழலாம். அதற்கு அவர்கள் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

முட்டை

முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. மேலும் கோலைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் இருப்பதால், மார்பகப் புற்றுநோய் மற்றும் கண் நோய் என்று எதுவும் வராமல் தடுக்கலாம். ஆகவே அத்தகைய முட்டை தினமும் ஒன்று சாப்பிட்டால், உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கூந்தலும் நன்கு வளரும்

பால்

அனைத்து வீடுகளிலும் சிறுவர்களாக இருக்கும் போது, அனைத்து அம்மாக்களும் தினமும் 2 டம்ளர் பாலையாவது குடிக்க கொடுப்பார்கள். ஏனெனில் பாலில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கொப்புக்கள் குறைவாக உள்ள பாலைக் குடித்தால், அதிலும் ஆண்கள் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பாலை தினமும் காலையிலும், இரவில் படுக்கும் முன்னும் குடித்து வந்தால், உடல் நன்கு தெம்பாக இருக்கும்.

சாலமன்

சாலமன் என்னும் மீன் இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அதில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 உள்ளது. மேலும் இதில் உள்ள ஃபேட்டி ஆசிட், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை நன்கு ஆரோக்கியப்படுத்துவதோடு, சருமம் மென்மையாகவும், உடல் எடையை குறைக்கவும் செய்யும். அதுமட்டுமல்லாமல், மூளை வளர்ச்சியை அதிகரிக்கும். அதிலும் இந்த மீனை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். இந்த மீனில் கலோரியும் குறைவு.

பீன்ஸ்

அனைத்து பயிர் வகைகளை விட, இந்த பீன்ஸில் அதிகமான அளவு நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஆகவே இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். மேலும் பீன்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய், நீரிழிவு, ஹைப்பர் டென்சன் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் டயட் மேற்கொள்பவர்கள், வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு ஏற்ற அனைத்து ஊட்டசத்துக்களும் கிடைத்துவிடும்.

ஓட்ஸ்

இதய நோய் மற்றும் டைப்-2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் டயட்டில் இருப்போரும் சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, உடலை நன்கு பிட்டாக வைக்கும். அதிலும் இந்த ஓட்ஸ் உடன், தயிர், நட்ஸ் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

ஆலிவ் ஆயில்

எண்ணெய்களிலேயே அதிகமான அளவு நன்மையை வைத்திருப்பது என்று சொன்னால், அது ஆலிவ் ஆயில் தான். இந்த ஆயில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஏனெனில் அதில் மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் புற்றுநோய் மற்றும் அல்சீமியர் போன்ற நோய்கள் வருவதை தடுக்கிறது. ஆகவே இந்த எண்ணெயை பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே, மேற்கூறிய அனைத்து உணவுகளையும் தினமும் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, அழகாக பொலிவோடு இருக்கும்.