FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on September 10, 2012, 07:11:01 AM
-
கால்கள் இல்லாத குழந்தை
பிடறி சிலிர்த்தோடும்
குதிரையை வரைந்து
வேண்டும் இடத்துக்கெல்லாம்
பயணப்பட்டுக் கொள்கிறது
***********
மீனை வரையச் சொன்னேன்
முதலில் தண்ணீரை வரைந்தாள்
பறவையை வரையச் சொன்னேன்
முதலில் வானத்தை வரைந்தாள்
ஏனென்று கேட்டேன்….
தண்ணியில்லாட்டி மீன் செத்துடும்
வானம் இல்லாட்டி எப்படி பறக்கும்?
எழுதியது ஈரோடு கதிர்
-
இதுதான் விளையும் பயிரை முளையில் தெரியும் என்றது போல அனும்மா
-
//கால்கள் இல்லாத குழந்தை
பிடறி சிலிர்த்தோடும்
குதிரையை வரைந்து
வேண்டும் இடத்துக்கெல்லாம்
பயணப்பட்டுக் கொள்கிறது
//
மாயையில் நாம் மூழ்கிடப்பதை, தன்னம்பிக்கையை என்று எதிர் எதிர் திசைகளை ஒரே நேரத்தில் விரித்துக் காட்டும் கவிதை
இயலாமையின் போது நாமும் இப்படித்தான் இல்லையா ஒரு கற்பனையில் மாயையில் மூழ்கி தனி ஒரு உலகை நிர்மாணித்து வாழ துவங்கிவிடுவோம் இல்லையா ?
//
மீனை வரையச் சொன்னேன்
முதலில் தண்ணீரை வரைந்தாள்
பறவையை வரையச் சொன்னேன்
முதலில் வானத்தை வரைந்தாள்
ஏனென்று கேட்டேன்….
தண்ணியில்லாட்டி மீன் செத்துடும்
வானம் இல்லாட்டி எப்படி பறக்கும்?
//
எதற்கும் அத்யாவசிய தேவை என்று ஒன்று உண்டு, அது இல்லையென்றால் அந்த செயல் நின்றுவிடும் அல்லது உயிர் நின்றுவிடும்
நம் நிலையும் சில நேரம் மீனை போல, சில நேரம் பறவை போல, சில நேரம் வரைய சொல்பவனை போல், சில நேரம் வரையும் அவளை போல
ஒரு சம்பவம் நான்கு முனை நான்கு பேராய் நாம்
பகிர்வுக்கு நன்றிங்க அனு அக்கா
-
anuka supera iruku ;D
-
Nandri Rose dear, aadhi, thavi :)