FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Dharshini on September 08, 2012, 04:02:33 PM
-
அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான்.
இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தான். வாயிலிருந்து வெளிப்பட்ட குப்பென்ற மதுவாடை மதுவை விரும்பி குடித்த அவனுக்கே பிடிக்கவில்லை தான் போலும்... அந்த வாடை அவனுக்கு கொஞ்சம் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது.
வீட்டு கதவை தொட்டு தடவி வலது பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை வேகமாக அழுத்தினான்.
வீட்டுக்குள் விளக்கு எரிந்தது. கதவை திறந்து கொண்டு அவனுடைய வயதான அம்மா நின்று கொண்டிருந்தாள்.
"ஏம்பா...இவ்ளோ லேட்டு..?" என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மகனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்.
கடிகாரம் மணி நள்ளிரவு பனிரெண்டரை என்று காட்டியது.
இல்லமா...கொஞ்சம் வேலை அதிகம் என்று அவன் சொல்லி சமாளித்தாலும் அவன் கூடவே சேர்ந்து வரும் மதுவின் வாடை அவன் தாமதமாக வந்த காரணத்தை அவளுக்கு உணர்த்தியது. அவள் எதையும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை.
அவன் கைப்பையை வாங்கி ஒரு மூலையில் வைத்து விட்டு அவனை கிணற்றடிக்கு அழைத்து சென்று அவன் ஆடைகளை களைந்து விட்டு, அவன் உடல் முழுவதுமாய் நனையும் படி தண்ணீரை வாரி இரைத்து ஊற்றினாள். நடு இரவு என்பதால் நீர் வழக்கத்தை விட அதிகமாக குளிரும் தான். ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் அதை அவனால் உணர முடியவில்லை.
மகனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று நாற்காலியில் உட்கார வைத்து ஈரம் படிந்த அவன் தலையை நன்றாக துடைத்தெடுத்து அதிகபட்ச வேகத்தில் மின்விசிறியை ஓட விட்டு அவனுக்கு வேறு உடை மாற்றி விட்டாள்.
அவன் சாப்பிடுவதற்கு சாப்பாடு எடுத்து வந்து அவனை சாப்பிடச் செய்தாள். கூடவே எப்போதும் இரவில் மகனுடன் சேர்ந்து சாப்பிடும் அவள் அவனுடன் சேர்ந்து சாபிட்டாள்.
பின்பு மகனை ஒரு கட்டிலில் படுக்க வைத்து, உடம்பை முழுவதுமாக மூடும்படி உள்ள ஒரு போர்வையை அவன் மேல் போர்த்தி விட்டு அந்த கட்டிலின் பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த தனக்கான பாயில் படுத்துக்கொண்டாள்.
காலை விடிந்தது...
அம்மா வாசலில் மாட்டுசாணம் தெளிப்பது, கோலம் போடுவது, குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பது, காலை சிற்றுண்டி தயாரிப்பது என்று அவளுடைய வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தாள்..
இவன் பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பது, சிறுது தூரம் நடைபயிற்சி பழகுவது என்று வழக்கமான தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
இவற்றையெல்லாம் முடித்து விட்டு குளித்து வேலைக்கு கிளம்ப தயாராகும் தன் மகனுக்கு உணவை ஒரு கிண்ணத்தில் அடைத்து தயாராக வைத்திருந்த அம்மாவிடம் அதை வாங்கிக்கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தை உதைத்து கிளம்பும் போது "அம்மா நான் போயிட்டு வர்றேன்" என்று அவன் விடைபெற, அதற்கு அம்மா "சரிப்பா பத்திரமா போயிட்டு வா...ஆனா நேத்து நைட்டு வந்த மாதிரி வராதப்பா...அத அம்மாவால தாங்கிக்க முடியாதுப்பா" என்று சொன்னாள்.
"நாகரீகம்" என்று வார்த்தையைகூட எழுத தெரியாத அம்மாவின் அந்த ஒரு வார்த்தை அவனுக்கு "சுரீர்" என்றிருந்தது.
-
Nice Story dharshini dear
-
Nalla iruku
-
Thz JJ ma
-
Thz Gotham