FTC Forum
ENGLISH => GENERAL => Topic started by: kanmani on September 08, 2012, 12:39:10 AM
-
சட்டென்று பெய்யும் மழையைப் போல, மலரும் பூவைப் போன்றதுதான் காதலும். ஆனால் பலநாள் பழகிய நண்பன் திடீரென ட்ராக் மாறி காதல் நிலைக்கு வருகிறார் என்பதை எப்படி கண்டுகொள்வது. அந்த காதல் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எப்படி வெளிப்படுத்துவது என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
நெஞ்சுக்குள் ஜில் உணர்வு
நட்பாய் இருக்கும் போது ஏற்படும் உணர்வு வேறு. அதுவே காதலாகினால் தோன்றும் உணர்வு வேறு. மனசுக்குள் ஜில் உணர்வு ஏற்படும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும். என்ன செய்வது என்ற குழப்பமான நிலை ஏற்படும். யாரிடமும் கோபமோ, வருத்தமோ ஏற்படாது இதழோரம் ஒரு குறும்புன்னகை ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த அம்சங்கள் உங்களைப் பார்க்கும் போது உங்கள் நண்பருக்கு ஏற்படுகிறதா? அப்ப நிச்சயம் அவர் உங்கள் மீது காதல் வயப்பட்டிருக்கிறார்.
அடிக்கடி போன் வருதா
நட்பான தருணங்களை விட அதிகமான அளவில் போன் செய்கிறாரா? காலை தொடங்கி இரவு வரை எஸ்.எம்.எஸ் மழை பொழிகிறதா? மெயிலில் ரொமான்ஸ் படங்களும், மெசேஜ்களும் வருகிறதா? அப்புறம் என்ன சந்தேகமே இல்லை உங்கள் நண்பருக்கு உங்கள் மீதான காதல் வலுவடைந்துவிட்டது.
பிரிவு தாங்க முடியலையா?
நீங்கள் எங்காவது வெளியூர் சென்றால் அவரை பிரிய நேரிடுகிறதா? நட்பாய் இருந்தபோது அந்த பிரிவு பெரிதாக தோன்றியிருக்காது. அதுவே காதலாகி மாறியபின்னர் ஒருநாள் பிரிவுக்கு கூட மனது தாங்காது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கு உங்களைத் தேடி வந்து விடுவார். அப்புறம் என்ன உங்களுக்கும் அவர் மீதான காதல் உறுதியாக இருந்தால் அவரைக் கண்டவுடன் மனதில் பட்டாம்பூச்சி பறந்தால், காத்திருக்காமல் காதலை சொல்லிவிடுங்களேன்.