FTC Forum

ENGLISH => GENERAL => Topic started by: kanmani on September 08, 2012, 12:33:26 AM

Title: பசங்க, அம்மா பையனா இருந்தா என்ன பிரச்சனை?
Post by: kanmani on September 08, 2012, 12:33:26 AM
இந்த உலகில் அனைவருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் தானே இந்த அழகான உலகிற்கு கொண்டு வந்தது. அத்தகைய அம்மாவை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி மிகவும் பிடிக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தான் அம்மா என்றால் உயிர். பெண்களுக்கு அப்பா தான் உயிர். வேண்டுமென்றால் அனைத்து வீடுகளிலும் பாருங்கள், பசங்க எல்லோருமே, அவர்களது அம்மாக்களிடமே மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். இவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பசங்களுக்கு திருமணம் ஆனப் பின்பு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைவது தான் காரணம். ஆகவே ஆண்கள் அம்மாவின் மீது மிகவும் பாசம் உள்ளவர்களாக இருந்தால், திருமணத்திற்குப் பிறகு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் பார்ப்போமா!!!

ஆண்கள் பெரும்பாலும் காதலில் விழுகிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம் தங்கள் அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாகத் தான் இருக்க வேண்டும். இதை கண்டிப்பாக அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் எப்போது பிரச்சனை வருகிறதென்று தெரியுமா? அது அனைத்தும் ஆண்களால் தான். ஏனென்றால், ஆண்கள் இதுவரை தன் அம்மாவின் செயல்கள் அனைத்தையும் மிகவும் நேசிக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு வரும் துணைவியும், தன் அம்மாவைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதனால் அவர்கள் துணையிடம் ஏதேனும் சொல்லப் போக, அதனால் பிரச்சனைகள் வரும். உதாரணமாக, மனைவி ஏதேனும் சமைத்தால், அந்த சுவை தன் அம்மாவின் கைமணத்தைப் போல இல்லையென்றால், அந்த நேரத்தில், அவர்கள் "என் அம்மா இப்படி செய்ய மாட்டாங்க. என் அம்மா சமையல் யாருக்குமே வராது." என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நேரத்தில் அவள் ஆசையாக சமைத்துக் கொடுத்ததைப் பற்றி பேசாமல், புகார் கூறினால் யாருக்கு தாங்க கோபம் வராது? இப்ப சொல்லுங்க, கோபம் வருவது தவறா?

தவறில்லை தான். இருந்தாலும், இந்த நேரத்தில் துணைவிகள், தன் கணவனைப் பற்றி தவறாக எண்ணக் கூடாது. அவர்களுக்கு அம்மாவைப் போல் துணையின் மீதும் அதிகப் பாசம் இருக்கும். சொல்லப் போனால் அவர்களுக்கு இருவருமே, இரண்டு கண்கள் போன்று. எதற்கு அப்படி பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு மனைவியை விட அம்மாவின் மீதே அதிக அன்பு உள்ளது என்பதை தன்னை அறியாமல் வெளிப்படுத்திவிடுகின்றனர். என்ன வேண்டுமென்றால், செல்லமாக ஒரு குட்டி சண்டை போட்டு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அந்நேரத்தில் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக திருமணத்திற்குப் பின் அனைத்து பெண்களும் தங்கள் கணவரிடம் "உங்களுக்கு யார் முக்கியம், அம்மாவா இல்லை நானா?" என்று கேட்கின்றனர். அனைத்து மனைவியும் முதலில் இந்த மாதிரியான கேள்வியை கேட்பதை விட வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு அவர்கள் அம்மா தான் முக்கியம், அதற்காக உங்கள் மீது பாசம் இல்லை என்று நினைக்க வேண்டாம். அதிலும் எப்போதெல்லாம், மாமியாருடன் சண்டை வந்தாலும், அப்போது அதனை ஆண்களிடம் சொன்னால், அவர்களால் அந்த நேரத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில் இருவருமே அவர்களுக்கு முக்கியம் தான். ஆகவே அவர்கள் எதுவுமே சொல்லாமல் சென்று விடுவர். ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் மனைவியிடம் சொல்ல நினைப்பது, "என் அம்மாவிற்கு வயதாகிவிட்டது, அவர்கள் ஏதோ ஒரு டென்சனில் அப்படி நடக்கிறார்கள். நீ என் உயிர், நீ இதை புரிந்து கொண்டு நடந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்" என்பது தான். ஆகவே இவை அனைத்தையும் புரிந்து கொண்டு மனைவி நடந்தால், பிரச்சனையில்லை.

அனைத்து ஆண்களும் ஒரு உணர்ச்சிவயப்பட்டவர்கள். அதிலும் அம்மா பையன் என்றால் சொல்லவே வேண்டாம். இதை அனைத்து அம்மா மற்றும் மனைவிகள் புரிந்து நடந்தால், வாழ்க்கை இனிமையாக செல்லும். ஆனால் ஆண்கள் திருமணத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி தன் அம்மாவின் மீது மிகுந்த அன்பை கொண்டிருப்பார்கள்.

இதனை அனைத்து பெண்களான மனைவிகளும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அதில் முக்கியமாக ஆண்கள் அவர்களது அம்மாவை எவ்வளவு நேசிக்கிறார்களோ, அதே அளவு தங்கள் மனைவியையும் நேசிக்கிறார்கள். இதை அனைத்து மனைவிகளும் மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து நடந்தால், வாழ்க்கை நன்கு சந்தோஷமாக இருக்கும்.

ஆகவே எப்படி ஆண்களுக்கு இந்த உலகில் தன் அம்மாவை விட உயர்ந்தது எதுவும் இல்லை என்று நினைக்கிறார்களோ, அதேப்போல் தான் தன் மனைவியையும் நினைக்கிறார்கள் என்பதை அனைத்து பெண்களின் மனதிலும் இருக்க வேண்டும்.