FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on September 08, 2012, 12:28:54 AM
-
குழந்தைகளுக்கு வறுத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளை கொடுத்தால் அது குழந்தைகளுக்கு மந்த தன்மையை ஏற்படுத்தி மூளையை மழுங்க வைத்துவிடும் என்று குழந்தை நல நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுத்தால் மட்டுமே அவர்கள் புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்கள் என்கின்றனர் குழந்தைநல மருத்துவர்கள்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்களுக்கு அக்கறை அதிகம் உண்டு. அவர்களின் வளர்ச்சியிலும், புத்திசாலித்தனத்திலும் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவை மட்டுமே கொடுப்பார்கள். சில குழந்தைகள் ஆர்வத்தில் சிக்கன் ப்ரை, ஐஸ்க்ரீம், சாக்லேட், பப்ஸ், பர்கர் உருளைக் கிழங்கு வறுவல் போன்றவைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் இதனால், குழந்தையின் உடல் மட்டுமல்ல, மூளையும் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குழந்தையின் மூளை மந்தமாவதோடு அவர்களுக்கு டிஸ்லெக்சியா என்ற நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எப்போதும் ஓடி விளையாடிக் கொண்டு சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தை திடீரென மந்தமாகக் காணப்பட்டால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். சாதாரணமாக விட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் டின் பழச்சாறுகளையும் கொடுக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, காய்கறிகள், பழங்கள் போன்றவை உடலுக்கு நன்மையை அளிக்கும். கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 சதவிகிதம் பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து அதனை குழந்தைகளுக்கும் வாங்கி கொடுக்காதீர்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் குழந்தைகளை ஊட்டச்சத்தான உணவை உண்ணுமாறு நீங்கள் எந்த அளவிற்கு வற்புறுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு தண்ணீர் அருந்துவதையும் ஊக்கப்படுத்துங்கள். சாப்பிட்ட பிறகு முழுதாக ஒரு டம்ளர் நீராவது அவர்கள் குடிக்க வேண்டும் என்பதை பழக்கப்படுத்த வேண்டும். விளையாட்டின் போது, படித்துக் கொண்டிருக்கும் போது இடை இடையே நீர் அருந்த வேண்டும் என்பதை சில நாட்களுக்கு நினைவு படுத்துங்கள். எங்கு சென்றாலும் தண்ணீர் கொண்டு செல்லும் பழக்கத்தையும் கொண்டு வாருங்கள். பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.