FTC Forum

ENGLISH => GENERAL => Topic started by: kanmani on September 07, 2012, 04:30:15 PM

Title: பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!
Post by: kanmani on September 07, 2012, 04:30:15 PM
பெண்களுக்கு பிடித்தால் எப்படி நடப்பார்கள் தெரியுமா?

ஆண்களே!!!

* பெண்கள் உங்கள் கண்களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள் மீது அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால், கண்டிப்பாக உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

* பெண்களுக்கு உங்களை பிடித்தால், அவர்களே உங்களை அடிக்கடி தொடுவார்கள். உதாரணமாக, அடிப்பது, அடிக்கடி தொட்டுப் பேசுவது, கை குலுக்குவது, கைகளை பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள். ஆம், உண்மை தான். ஏனெனில் அவர்கள் உங்கள் மீது விருப்பம் இருப்பதால் தான் அவர்கள் உங்களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எதுவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளி விடாமல் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். பின்னர் என்ன ஜமாய்ங்கப்பா...

* உங்கள் மீது விருப்பம் இருந்தால், பெண்கள் அதிக நேரம் உங்களுடன் பேசுவார்கள். மேலும் எவ்வளவு தான் நண்பர்களுடன் கூடி பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் உங்களுடன் பேசுவார்கள் அல்லது மெசேஜ் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்களுக்கு போன் செய்து பேசுவார்கள்.

* உங்களைப் பிடித்தால், என்ன தான் நீங்கள் பேசினாலும் பெண்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அது எவ்வளவு தான் படு மொக்கையாக இருந்தாலும், அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால், நிச்சயம் அது காதல் தான். மேலும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

* எங்கேனும் அவர்களுடன் வெளியே தனியாக போக திட்டம் போட்டு, அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்பது உங்களுக்கு தெரிந்தும், உங்களுடன் வருவதற்கு ஒப்புக் கொண்டால், அந்த நேரத்தில் நீங்கள் அந்த திட்டத்தை முறியடிக்காமல், செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுடன் வெளியே வந்து, அப்போதும் உங்களிடம் காதலை சொல்லும் வாய்ப்புகளும் உண்டு. இந்த சந்தர்ப்பத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

* உங்களிடம் பேசும் போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட்டிக் கொண்டிருப்பதை, நீங்கள் கண்டால், நிச்சயம் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு கண் உள்ளது என்பதை அறியலாம். இது ஒரு சிறிய சிம்டம் தான்.

* நீங்கள் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்து, கோபப்பட்டால், அது கூட, உங்கள் மீது இருக்கும் ஒரு வகையான காதல் தான். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் உண்மையில் அவர்கள் உங்களை வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவர்களது காதல் வெளிப்படுகிறது.

என்ன நண்பர்களே!!! உங்களை யாராவது லவ் பண்றாங்களா...?
Title: Re: பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!
Post by: Gotham on September 07, 2012, 04:35:50 PM
Ithai eluthiyathu Aana Penna?


Apo thaan ithoda nambagathanmai vilangum :D  8)
Title: Re: பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!
Post by: ஆதி on September 07, 2012, 04:45:51 PM
ப்ரிண்டௌட் போடு ப்ரிண்டௌட் போடு

ரெஃபரன்ஸ்க்கு உதவும்

இனி எல்லா பொண்ணுங்க கண்ணுகளையும் உத்து உத்து பாக்க வேண்டியதுதான், ஏதாவது பிரச்சனை வந்தா இத படிங்கனு ப்ரிண்டௌட்டை குடுத்துடனும்

பட் பசங்களா இதை வச்சு மட்டும் முடிவு பண்ணிடாதீங்க, பொண்ணுகளுக்கு அழுகை மட்டும் ஆயுதமல்ல, அண்ணானு சொல்றது கூட ஆயுதம் தான்
Title: Re: பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!
Post by: kanmani on September 08, 2012, 12:12:48 AM
gotham eluthinadhu aana irundha .. anubavamnu solikalaam

penna irundha manasila irupadhunu solikalaam .. edhunaalum  ungaluku udhavugira vishayam dhaane :D
Title: Re: பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!
Post by: kanmani on September 08, 2012, 12:13:49 AM
Aadhii

printout daily kaila vachipeenga pola irukae :D

any way all the best