FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: kanmani on September 07, 2012, 04:24:44 PM

Title: தேளின் இயல்பும்... துறவியின் இயல்பும்...
Post by: kanmani on September 07, 2012, 04:24:44 PM
ஒரு மடாலயத்தில் ஜென் துறவிகள் இருவர் வாழ்ந்து வந்தனர். ஒரு முறை மடாயத்தில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு வியர்த்து கொட்டியது. அதனால் அவர்கள் காற்றோட்டமாக நடக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.

அதனால் அவர்கள் அந்த மடாலயத்தின் அருகில் உள்ள நதிக்கரையோரம் நடந்து சென்றனர். அப்போது தேள் ஒன்று கவனம் தவறி தண்ணீரில் தவறி விழுந்துவிட்டது. அதைப் பார்த்த ஒரு துறவி அதை எடுத்து தரையில் விட்டார். அப்போது அந்த தேன் அவரை கொட்டிவிட்டது.

கொட்டும் போது மறுபடியும் தண்ணீரில் தவறி விழுந்தது. மீண்டும் வெளியே எடுத்துவிட்டார். மறுபடியும் கொட்டி நீரில் விழுந்தது. அவரும் எடுத்து வெளியே விட்டார். இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த மற்றொரு துறவி அவரிடம், "அது தான் கொட்டுகிறதே, ஏன் காப்பாற்றுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "கொட்டவது அதன் இயல்பு, நான் என் இயல்பில் இருக்க விரும்பிகிறேன். அதனால் தான்." என்று கூறினார்.
Title: Re: தேளின் இயல்பும்... துறவியின் இயல்பும்...
Post by: Gotham on September 07, 2012, 04:32:55 PM
Iyalbu maara thanmai manithanukkaa? Thuraviku enbathu etrukkolakoodiyathe


Nalla kathaiku nanri
Title: Re: தேளின் இயல்பும்... துறவியின் இயல்பும்...
Post by: ஆதி on September 07, 2012, 04:51:56 PM
ஜென்னின் தத்துவம் அவரவரரும் அவரவராய் இருத்தல் என்பது

நீ நீயாய் இரு

அது அதுவாய் இருக்கட்டும்

இதுவே எல்லா மதங்களின் போதனை என்றாலும், அதனை வாழ்ந்து காண்பித்தவர்கள் ஜென்கள் மட்டும் தான்

இதில் இருக்கும் இன்னொரு உட்கருத்து, எல்லாவற்றிலும் தன்னை காண்பது, தவிப்பது தேள் அல்ல நானே என்று நினைப்பது