FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 07, 2012, 04:09:25 PM

Title: சாக்லேட் நீண்ட நாள் ஃப்ரஸ்ஸா இருக்கமாட்டேங்குதா?
Post by: kanmani on September 07, 2012, 04:09:25 PM
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடுவது, சாக்லேட் தான். அந்த சாக்லேட்டை அடிக்கடி கடைக்குச் சென்று வாங்குவதை விட, வாரம் ஒரு முறை சாக்லேட்டை பர்சேஸ் செய்யலாம். ஆனால் அவ்வாறு பர்சேஸ் செய்த சாக்லேட்டை சரியான இடத்தில் வைத்து பராமரிக்காமல் இருந்தால், நீண்ட நாட்கள் ஃப்ரஸ் ஆக இல்லாமல், அவை கரைந்து ஒரு மாதிரி ஆகிவிடும். அதிலும் நிறைய பேர் ஃப்ரிட்ஜில் நன்கு குளிர்ச்சியான ஃப்ரீசரில் வைத்தால், நன்கு இருக்கும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் அது மிகவும் தவறான ஒன்று. உங்களுக்கு தெரியுமா, சாக்லேட்கள் எப்போதும் விரைவில் கெட்டுப் போவதில்லை. வேண்டுமென்றால், அதன் கடினத்தன்மை போகுமே தவிர, நிச்சயம் கெடாமல் இருக்கும். ஆகவே அத்தகைய சாக்லேட்டை வாங்கி வைக்கும் போது, ஒருசிலவற்றை மனதில் கொள்ள வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* சாக்லேட்டை வைப்பதற்கு குளிர்ச்சி மற்றும் இருட்டான இடம் தான் சரியான இடம். அதிலும் முக்கியமாக சாக்லேட்டை குளிர்ச்சி மற்றும் இருட்டான இடத்தில் வைக்கும் போது, அந்த இடம் ஈரமானதாக இருக்கக் கூடாது. ஏனெனில் அவ்வாறு இருந்தால், சாக்லேட்டில் இருக்கும் கொக்கோ மற்றும் சர்க்கரை தனியாக பிரிந்துவிடும். அதிலும் சாக்லேட்டை வீடு அல்லது ஆபிஸில் இருக்கும் ட்ராயரில் வைக்கலாம். இது சாக்லேட்டை வைப்பதற்கான சிறந்த இடம்.

* ஒரு முறை சாக்லேட்டை அதன் கவரில் இருந்து பிரித்துவிட்டால், பின்னர் அதனை ஒரு கவர் போட்டு தான் வைக்க வேண்டும். இல்லையென்றால், சாக்லேட்டில் இருக்கும் இனிப்பிற்கு எறும்புகள் மற்றும் மற்ற பூச்சிகள் வந்துவிடும்.

* சாக்லேட்டை அதிக மணம் உள்ள பொருளுடன் வைத்து சேகரிக்க வேண்டாம். ஏனெனில் சாக்லேட் விரைவில் மற்ற பொருளின் வாசனையை உறிஞ்சிக் கொள்ளும். உதாரணமாக, ஃப்ரிட்ஜில் சாக்லேட்டை வாழைப்பழத்தின் அருகில் இரண்டு நாட்கள் வைத்தால், பிறகு அதனை சாப்பிடும் போது வாழைப்பழத்தை டேஸ்ட் செய்தது போல் இருக்கும்.

* முக்கியமாக சாக்லேட்டை மிகுந்த குளிர்ச்சியான ஃப்ரீசரில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், பின் அது மிகவும் கடினமாக ஆவதோடு, டேஸ்ட் இல்லாமலும் போய்விடும்.

* அதேப் போல் மிகவும் வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் வைக்கக்கூடாது. இதனால் அதை கரைந்துவிடும். அதனால் தூய்மையான கொக்கோவின் சுவையும் போய்விடும். அதிலம் எப்போது கொக்கோ கரைய ஆரம்பிக்கிறதோ, அப்போது அதன் மேல் வெள்ளையான ஒரு லேயர் உண்டாகும். பின் அதை சாப்பிடும் போது அதில் இருக்கும் மென்மை போய்விடும்.

ஆகவே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழுங்கள்.