FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 06, 2012, 02:41:20 PM
-
ஓணானென
எண்ணச்சுவரில்
ஒளிந்தும் தலைக்காட்டுவதுமாய் இருக்கிறது
ஒரு சுடு சொல்.
தூக்கம் எரிந்து சாம்பலான இந்த இரவில்
அலையென
தரைக்கடலில் புரண்டு புரண்டு படுக்கும்
என் கைகளுக்கு எக்கல்லும் அகப்படவில்லை
அதைக் கொல்ல..
-
உண்மைதான் தூக்க மாத்திரை போட்டு தூங்கினாலும் .. ஒருத்தர் நம்மை சுடு சொல்லால் பேசி விட்டல் தூக்கம் வரத்து அந்த வேதனையை போக்க ஏதும் வலி கூட தெரியாது துன்பமாக இருக்கும் அருமையான கவிதை ஆதி