FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 05, 2012, 06:18:36 PM
-
ஒரு பயணம்..
அனைவரையும் போலவே
ஆபாச நகைச்சுவை ஒன்றையும்
சுமந்து விரைந்தது ரயில்..
மற்றவர்கள் போல்
நானும் படித்தவுடன்
சிரித்துவிட்டேன்..
பிறகொரு அருவருப்பு உண்டானது
அதை எழுதியவர் மேல்..
அதை எழுதியவர் யாராகவும் இருக்கலாம்
அதே ரயிலில் பயணம் செய்தவாறும் இருக்கலாம்..
இதே நகைச்சுவையை
வேறெங்கோ எழுதிக்கொண்டோ
பகிர்ந்து கொண்டோ இருக்கலாம்
இத்தருணத்தில்..
நாளை நானும் வேறொருவருடன்
இந்நகைசுவையை பகிர்ந்து கொண்டு
ஆபாச சிரிப்பொன்று சிரிக்க நேரலாம்..
இங்கு சிலரின் மனதில்
இது ஒத்த வேறு நகைச்சுவை ஊறலாம்..
என்னைப் போல் இங்கு வேறொருவரும்
கவிதை எழுதிக் கொண்டிருக்கலாம்..
இல்லை இந்த எதுவுமே நிகழாமலும் இருக்கலாம்..
ஊற்றெடுக்கும் எண்ணங்களில் ஊடே
என் நிறுத்தம் வர
இறங்க ஆயத்தமாகிறேன்..
அவரவர் நிறுத்தங்களில்
அவரவரும் இறங்கி சென்றவிட கூடும்
இந்த நகைச்சுவையை
ரயிலில் இருந்தும்..
மனதில் இருந்தும்..
இறக்கிவிடாமல் என்னை போல்.
-
உண்மைதான் ஒரு விடயம் ஆழமாக பதிந்து விட்டால் அது என்ன விடயம் என்றாலும் அதை மறப்பது அவ்வளவு எளிதன்று .. அருமையான கவிதை ஆதி நன்றி