FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 05, 2012, 01:30:33 AM

Title: அவளின் இரவு
Post by: ஆதி on September 05, 2012, 01:30:33 AM
சற்றே வித்யாசமாய்
இந்த இரவு..

அவளும் விளக்கும்
விழித்திருந்தார்கள்
வெகுநேரம்..

காற்று மட்டுமே
நடமாடிக்கொண்டிருந்த வீதியை
அவ்வப்பொழுது கவனித்து
ஆவல்கள் திரும்பின
தலைசாய்த்து..

சாத்தியும்
சாத்தாமலும் இருந்தன
கதவும் இமையும்..

இரவு சுருங்க சுருங்க
விரிந்து கொண்டிருந்தது
வெறுமையாய் வயிறும் மறுநாளும்..

அந்த இரவில்
அவளும் படுக்கையும்
கசக்கப் படவில்லை..

அன்றே அவள்
அலங்காரம் களையாதவளாய்
வழக்கத்துக்கு மாறாய்
Title: Re: அவளின் இரவு
Post by: Global Angel on September 05, 2012, 01:34:10 AM


இந்த கவிதை கணவனை எதிர் பார்த்து காத்திருக்கும் பெண்ணின் கவிதையா ... இல்லை ஒரு விலை மாதுவின் இரவா ....ஆனால் ஆவலோடு அவள் காத்திருகின்ற போது விலை மாதுவை இருக்க வாய்ப்பு இல்லை என நினைகின்றேன் என்ன அப்படிதானே ..
Title: Re: அவளின் இரவு
Post by: ஆதி on September 05, 2012, 01:39:49 AM
இது ஒரு பாலியல் தொழிலாளி பற்றிய கவிதைதான், வாடிக்கையில்லாத அவளின் ஒரு இரவை குறித்து எழுதியது
Title: Re: அவளின் இரவு
Post by: Global Angel on September 05, 2012, 01:47:56 AM
Quote
காற்று மட்டுமே
நடமாடிக்கொண்டிருந்த வீதியை
அவ்வப்பொழுது கவனித்து
ஆவல்கள் திரும்பின
தலைசாய்த்து..




பாலியல் தொழிலாளி ... ஆவலாய் எதிர் பார்ப்பாளா ....
Title: Re: அவளின் இரவு
Post by: ஆதி on September 05, 2012, 01:54:14 AM
//இரவு சுருங்க சுருங்க
விரிந்து கொண்டிருந்தது
வெறுமையாய் வயிறும் மறுநாளும்..//

ஆவலுக்கான காரணம் இங்கே சொல்லியிருக்கேன்
Title: Re: அவளின் இரவு
Post by: Global Angel on September 05, 2012, 02:14:16 AM
ada aamalaa keke  ;D