FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on September 04, 2012, 08:07:55 PM

Title: என்ன ஒரு வர்ணனை ..!!!
Post by: supernatural on September 04, 2012, 08:07:55 PM
மிகையின்றி, குறையுமின்றி
அளவான அளவுடைய
அழகான கரும் போர்வை
உன் கார்கூந்தல் ...

நிலவுமகள் மண்ணிறங்கி
வருவதற்க்கு ஆசைகொண்டால்
தற்காலிகமாய் தங்குமிடம்
உன் நெற்றி ...

வானத்திர்க்கே ஒன்றுதான்
உன் முகத்திற்கு மட்டும்
இரு கருநிறவானவில்
உன் புருவங்கள் ...

மானினமே மேன்மைபெற
மிளிர்ந்திடும் தன்மையுடன்
படைக்கப்பட்ட ,கண்களின் மாதிரி
உன் கண்கள் ...

உன் மான்விழிகளை கண்டு
நாணத்தினில் தலைகீழான
ஏழாம் எண் போன்றது
உன் மூக்கு ...

கோவை பழ இனமே
கோவத்தினில் கோவப்படும்
கொஞ்சும் இருக்குவியல்களாய்
உன் இதழ்கள் ...

மன்னவனின் முன்னிலையில்
கண்ணகி உடைத்த சிலம்பினில்
சிதறிய மாணிக்க பரல்கள்
உன் பற்கள் ...

பாலுடன் தேனும் கலந்து
நன்றாய் காய்ச்சிய பாகினில்
ஊறிய இரு பண்கள்
உன் கன்னங்கள் ...

ஒன்றன்பின்வொன்றாக அழகின்
பிரதான பிரதிநிதிகளாய்
அணிவகுக்கும் அழகுகளை
அப்படியே, படித்துவைத்தால்
தமிழுக்கு தவறிய
ஆறாம் பெருங்காவியம் அவள்

மாறாக ,படிக்காமல்,
வடித்து வைத்தாலோ
ரவிவர்மனின் தூரிகைக்கு
வாய்க்காத, மிளிர்ந்திடும்
வசீகர ஓவியம் அவள் ...