FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 04, 2012, 12:56:45 PM

Title: இன்மை
Post by: ஆதி on September 04, 2012, 12:56:45 PM
உன் இன்மையும்
வெறுமையும் வழிந்தோடும்
நமதிந்த வீட்டில்
அமர்ந்திருக்கிறேன்
ஆற்றாமையின் தோளில் சாய்ந்து..


நம் அறையின்
கண்ணாடியில்
தளும்பும் எனது பிம்பதினோடு
பேசி கழிக்கிறேன்
எனது தனிமைகளை..

சுற்றுச் சுவர்களில்
ஏக்கத்தையும் கனத்தையும்
வரைந்து போகிற
காலத்தின் சிறகில் இருந்து
மனசுக்குள் உதிர்கிறது
ஒரு இறகு
உன் நினைவாய்..

அந்த தூய இறகின்
தொடுகையால்
மாறுகிறேன் நானும்
மிக மெலிந்த துளியாய்
உன் குழலுக்காக பூத்த
ரோஜாகளில் பனியாய் விழுந்துவிடும்
வைராக்கியத்தோடு..
Title: Re: இன்மை
Post by: Global Angel on September 05, 2012, 01:02:19 AM
காதல் வேதனை , காதல் காத்திருப்பு .. இவைகளெல்லாம் ... கஷ்டத்திலும் சுகம் கொடுக்கும் இனிய நினைவைலைகள் இல்லையா ..

எனக்கு இதன் இறுதி வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது

Quote
மிக மெலிந்த துளியாய்
உன் குழலுக்காக பூத்த
ரோஜாகளில் பனியாய் விழுந்துவிடும்
வைராக்கியத்தோடு..
Title: Re: இன்மை
Post by: ஆதி on September 05, 2012, 01:23:42 AM
இது தற்காலிக பிரிவால் வாடும் கணவனின் துயரை கொண்டு எழுதியதுங்க
Title: Re: இன்மை
Post by: Global Angel on September 05, 2012, 01:31:24 AM
pirivu thuyar thaane ... hahaha sontha anubavamaaa
Title: Re: இன்மை
Post by: ஆதி on September 05, 2012, 01:37:31 AM
சொந்த அனுபவத்துக்கு கல்யாணம் ஆகனுமில்ல

ஏழு வருடங்களுக்கு முன் இல்லறத்தில் நிகழும் சிறு சிறு சண்டைகள், பிரிவுகள், ஊடல்கள், காதல், தாபம், கோபம், விரக்தி போன்றவைகளை வைத்து ஒரு தொகுப்பு எழுத வேண்டும் என்று துவங்கினேன், ஐந்தாறு கவிதைகளிலேயே பலர் ஒரே பாணியில் இருக்கிறது, மற்ற களங்களிலும் எழுதுங்கள் என்று அறிவுறுத்த கைவிட்டேன்

முன்பு பதித்த முரண், வெக்கை, இவை எல்லாம் அந்த வகையில் எழுதியதே 
Title: Re: இன்மை
Post by: Global Angel on September 05, 2012, 01:46:40 AM
ahaa .. ok ok  ;D