FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on September 04, 2012, 12:15:36 PM
-
பெண்கள் பயன்படுத்தும் சென்ட், பாடிஸ்பிரே, நெயில்பாலிஷ் போன்ற அழகு சாதனப் பொருட்களே அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக முடிகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அழகு சாதனப்பொருட்களில் உள்ள ரசாயனங்கள் பெண்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் மருத்துவமனையின் பெண்கள் நலப்பிரிவு சார்பில் டாக்டர் தமரா ஜேம்ஸ் டாட் தலைமையிலான ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
‘தேசிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம்' என்ற பெயரில் ஒரு கணக்கெடுப்பினையும் அதனுடன் இணைந்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 2,350 பெண்கள் சிறுநீர் தொற்றால் அவதிப்படுவது முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தாலேட்ஸ் வகை ரசாயனம் அவர்களது சிறுநீரில் அதிக அளவில் இருந்ததே இதற்கு காரணம் என்பது பல்வேறு பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. தாலேட்ஸ் ரசாயனம் அதிக அளவில் இருந்தவர்கள் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர் என்பதும் தெரியவந்தது.
பெண்களின் ஹார்மோன்களை பாதிக்கும் தாலேட்ஸ் என்ற ரசாயன நச்சுப் பொருள் மாயிஸ்சரைசர், சோப்புகள், ஹேர் ஸ்பிரே ஆகியவற்றில் காணப்படுகிறது. மேலும் நெய்ல் பாலிஷ், பாடி ஸ்பிரே, சென்ட் உள்ளிட்ட பர்ப்யூம்களில் இந்த தாலேட் அதிகமாக உள்ளது. இந்த தாலேட்ஸ் ரசாயனம்
நாம் அதிகம் பயன்படுத்தும் பசைப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டு சாதனங்களில்கூட அதிக அளவில் காணப்படுகிறது.
தாலேட்ஸ் அதிகம் உள்ள ரசாயன பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்தினால், நம் உடலில் இவை அதிகம் ஊடுருவும். நாள்பட பயன்படுத்தும்போது சர்க்கரை நோய்க்கு ஆளாகும் அபாயம் உண்டாகும். இந்த தாலேட்ஸ் வகைகளான மோனோ பென்சைல் தாலேட் மற்றும் மோனோ ஐசோபியூட்டைல் தாலேட் ஆகியவை சிறுநீரில் அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே, முடிந்தவரை இந்த வகை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அவ்வப்போது முழு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டால், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.