FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on September 04, 2012, 12:10:52 PM

Title: மனஅழுத்தம் ஏற்படுதா கவலைபடாதீங்க... ஈஸியா விரட்டலாம்..
Post by: kanmani on September 04, 2012, 12:10:52 PM
இன்றைய காலத்தில் அதிக மக்கள் மனஅழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்தம் வேறு எங்கு இருந்தும் வருவதில்லை, நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே மனஅழுத்தம், உளைச்சல் போன்றவை ஏற்படுகிறது. அதிலும் தற்போது அதிக வேலைப்பளு பலருக்கு உள்ளது. இதன் காரணமாகவும் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது. அதிலும் பெண்களே அதிக அளவில் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை குறைக்க, சரிசெய்ய என்ன செய்ய வேண்டுமென்று உளவியல் நிபுணடர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

மனஅழுத்தத்தை விரட்டும் வழிகள்:

* எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மனஅழுத்தம், மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆக இருந்தால், மன அழுத்தம் வருவதைத் தடுக்கலாம்.

* வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு மற்றும உடலுக்கு நன்கு எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதிலும் வீட்டில் பூஜைக்கு அல்லது தலைக்கு வைக்க பூக்களை வாங்குவீர்கள். அதில் சிறிது பூக்களை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்துவிட்டு, பின்னர் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், அதன் நறுமணத்திற்கு மன அழுத்தம் குறைந்து, மனதும் சற்று ரிலாக்ஸ் ஆகும்.

* மன அழுத்தம் ஏற்பட மற்றொரு காரணம், தன் மனதில் இருக்கும் பிரச்சனை மற்றும் கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதது ஆகும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் உயிர் தோழனிடம் மனம் விட்டு பேசிப்பாருங்கள், அப்போது உங்களுக்கே மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துப் போல் இருக்கும். மனம் குதூகலத்துடன் காணப்படும்.

* மனம் கஷ்டமாக இருக்கும் போது, பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியை செய்தால், மன இறுக்கம் குறையும். இல்லையென்றால் கடினமான உடற்பயிற்சி அல்லது வேகமாக நடப்பது போன்றவற்றையும் செய்யலாம். அதனால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, மனதிற்கும் தான்.

* சிகரெட், மதுபானம் போன்றவையும் மனஅழுத்ததிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே அதனை குறைப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் பொருள் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஹார்மோன்களோடு தொடர்புடையது.

* எதைப் பற்றியும் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதிலும் முக்கியமாக நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்து கவலைப்படக்கூடாது. இவ்வாறு யோசித்தால், இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படாமல், உடலும் மனமும் பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். வேலை இல்லாத நேரத்தில் மனதிற்கு அமைதியைத் தரும் பாடல்கள் அல்லது பிடித்த பாடல்களை கேட்டலாம். இவற்றாலும் மனஇறுக்கம் குறையும்.

நண்பர்களே! மனஅழுத்தம் ஏற்பட்டால், இதயம் மறைமுகமாக பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.