FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 04, 2012, 01:48:40 AM
-
சூரியக் கோலம் போட
இரவு மகள்
வானம் தெளித்த நீரா ?
புல்லின் இதழும்
பொழுதின் இதழும்
முத்தமிட்ட
எச்சில் துகளா ?
வானக் கண்ணகி
வைகரையில் உடைத்த
நிலா சிலம்பின்
பனி பரல்களா ?
முகிழ்ந்த முகையும்
முகிலும் புணர்ந்து
பிரிந்தப் போலுதில்
பீறிட்ட கண்ணீரா ?
நித்தலம் அள்ளி
நிலாப் பெண்ணாடிய
சிற்றிலில் இருந்து
சிதறிய மணிகளா?
எவளோ ஒருத்தியை
காதலன் தழுவையில்
சிந்தி தொலைத்த
சிவக்காத நாணங்களா ?
ராத்திரி யாசகன்
பாத்திரத்தில் இருந்து
தவறிய பருக்கைகள்..
புல்லின் மேனியில்
புருவமும் இமையும் இன்றி
இத்தனை விழிகள்
எந்த கௌதம சாபங்கள் ?
விருப்பம் கொண்ட
விண்மீன் இரண்டு
நெருக்கம் கொண்ட
நினைவின் கவிதைகள்..
தேவதை மையலில்
தேவனைக் கூடயில்
சிதறித் தெறித்தக்
காமத் துளிகள்..
எந்த கவிஞனும்
எழுதாத எண்ணங்கள்
அந்தி வானத்தில்
இல்லாத வண்ணங்கள்..
என்ன என்னவோ
எண்ணிப் பார்த்தேன்
என்னையும் அவளையும்
எழுதப் பார்த்தேன்
இருந்தக் கற்பனைத்
தீர்ந்தக் காரணத்தால்..
வானவில் கோட்டையும்
வறுமைக் கோடாய்
காணலுறும் கூளிகளுக்காய்
கடைசிவரிச் சொல்கிறேன்..
விளிம்புநிலை மனிதர்களின்
வியர்வைத் துளிகள்..
-
சூரியக் கோலம் போட
இரவு மகள்
வானம் தெளித்த நீரா ?
புல்லின் இதழும்
பொழுதின் இதழும்
முத்தமிட்ட
எச்சில் துகளா ?
ராத்திரி யாசகன்
பாத்திரத்தில் இருந்து
தவறிய பருக்கைகள்..
எந்த கவிஞனும்
எழுதாத எண்ணங்கள்
அந்தி வானத்தில்
இல்லாத வண்ணங்கள்..
இருந்தக் கற்பனைத்
தீர்ந்தக் காரணத்தால்..
வானவில் கோட்டையும்
வறுமைக் கோடாய்
காணலுறும் கூளிகளுக்காய்
கடைசிவரிச் சொல்கிறேன்..
விளிம்புநிலை மனிதர்களின்
வியர்வைத் துளிகள்..
miga arumaiyaana kavithai aadhi.
romba azhagaa mudichi irukinga ..
-
romba nandringa Anu
-
பனி துளிகளுக்கு இப்படி ஒரு வர்ணனையா ... மிக அருமை ஆதி ... அனுமா சொன்னது போல இதன் முடிவு அருமையிலும் அருமை
-
நன்றிங்க, இந்த வகை கவிதைகள் கொஞ்சம் எளிமையா எழுதிடலாம், வர்ணனை கவிதை யென்றாலே இந்த வடிவத்தில் தான் கையாளுவேன்
வர்ணிப்பதோடு மட்டும் நில்லாமல் வார்த்தைகளிலும் அழகு சேர சொல்லும் போது அது இன்னும் அழகாகிவிடுவதாய் நம்பிக்கை, ஈஸியாவும் ஏமாத்திடலாம் பாருங்க வார்த்தை ஜாலம் காட்டி
-
ada paavingalaa ;D
-
:D :D :D