FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 04, 2012, 12:19:43 AM
-
வேர்களின் தகிப்புக்கு
நீர் கேட்ட செடிகளை
ஊர்கடத்தி
பற்பல வண்ணங்குலைந்து
அறிவியலின் ஆக்கதில் பூக்கும்
'பிளாஸ்டிக்' செடிகளை
நுகர்வோர் அதிகம்.
வளர்த்த ஆசைக்கு
மலராத வருத்தத்தின் அதிர்வுகளாய்
வீட்டுள்,
அழகு பெயர வாங்கி
ஆற்றாமை தணிப்பர் சிலர்.
பருவத்தடை பழக்கி
உலர்வையும்
உதிர்வையும் மீறி
நிரந்திர பச்சை நுரைக்கும்
இலைகளின் நுனியில்
கனக்கும்,
காற்றில் முணகாத ஏக்கங்கள்.
மேசையில்
கண்ணாடி அலமாரியில்
தொலைக்காட்சியின் தலையில்
தேன் தாது நறுமணம்
அளவளாம்ல் விரியும்
இயற்கையைக் கடந்த இதழ்கள்.
வெளிறா நிறம் கொண்டும்
பூப்புணர் வண்டோ
மென்விரல் மாதரோ
வருடாமையால்,
வெறுமையே பூரிக்கும்
'பிளாஸ்டிக்' பூக்களின் புன்னகை..
-
ஹஹா .. என்னதான் செயற்கைகள் நம் ஆசைகள் தேவைகளை பூர்த்தி செய்தாலும் .. அதனால் நிரந்தரமான இன்பத்தையோ .. இயற்க்கை மிளிர்வுகலையோ கொடுக்க முடியாது என்ற கருது தொனிக்கும் உங்கள் கவிதை நன்று ஆதி