FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 03, 2012, 05:20:18 PM
-
வளர்க்க நாய்
வாங்கினான் அவன்..
நாற்புறம் இருந்தும்
குழுமினர் திரண்ட குடும்பத்தார்..
வாய் கறுப்பாய் இருப்பது
வீட்டுக்கு நல்லதென்றாள்
பாட்டி..
நெடிய கால்களொடு
ஐவிரல் இருத்தலால்
நல்ரக நாயென்றார் அப்பா..
முட்டைகோஸ் போன்ற
மென்காது பற்றி தூக்க
கத்தியதால்
சுரணை அதிகமென்றாள்
அக்கா..
சுருட்டை வாலுடையதால்
முரட்டு நாயாக வருமென்றாள்
அம்மா..
குவிந்த இதழ்களால்
ஜு ஜுவென ஒலித்து
தலைதடவி
ஷேக் கன் கொடு
ஷேக் கன் கொடு என்று
விளையாடினான் தம்பி..
சற்று நேரத்திற்கெலாம்
அவரவர் பணிக்கு
அனைவரும் மீள
பசித்த வயிறொடு
பால்கணியில் கட்டப்பட்டு
நின்றிருந்தது நாய்..
அனாதையாய்.
-
நாய் கதை ... நாய்களுகல்ல... நாயாகி போன நம்முள் சில பேருக்கும் பொருந்தும் ... புதிதிட்கு எல்லாம் புதுமையாய் .. அருமையாய் .. ஆச்சரியமாய் பார்ப்பார்கள் படந்துபார்கள் .. அப்புறம் பழகி விட்டதே என்று ஒதுக்கபட்டு விடும் அது ... மனித வாழ்கையின் ஒரு கூறுதான் ... கவிதை நன்று ஆதி ..