FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 02, 2012, 06:45:56 PM

Title: சுயப்புலம்பல்
Post by: ஆதி on September 02, 2012, 06:45:56 PM
காதாடும் தோடுக்கும் கதப்பாடும் குழலுக்கும்
வாதாடும் இதழுக்கும் வட்டாடும் விழியினுக்கும்
தோதான உவமைகள் தொகைதொகையாய் எடுத்துபாடி
சாதார்ண வாழ்வொன்றில் சரிந்துதிர்ந்து போவேனா

நயவுலகு ஆசைகளின் நயனத்தில் எனையிழந்து
வயமாகி வாழ்வினின்ப மயக்கத்தில் மூழ்கிமூழ்கி
தயவான உன்னன்பின் தண்மைதனை உணராத
பயன்கெட்ட பிறப்பென்ற பதத்தோடு சாவேனா

போதைதரும் பொருளெல்லாம் போகமென்று சேகரித்து
சூதைவிட கொடியவனாய் சுகத்துக்கு அலைந்தலைந்து
பாதையென்று பார்வைபட்ட பக்கமெல்லாம் போய்தோய்ந்து
வேதபொருள் உன்நினைவை வேண்டாமென் றுவிடுவேனா

முத்தணைக்கும் மங்கையரின் முறுவலுக்கு முன்விழுந்து
அத்தனைக்கும் முதலான ஐயுருவ பொருளுன்னை
சித்தணைத்து அருள்ஞான ததுவத்தை அடையாமல்
பித்தளிக்கும் சிருங்கார பெருஞ்சேற்றில் புரள்வேனா

அங்கமெல்லாம் அண்டுகிற அந்தரங்க ஆசைகட்கு
தங்கமலர் தோகையரால் சிங்கார புனைவுசெய்து
சங்குஊதி சாமரமும் சங்கடப்ப டாதுவீசி
மங்குகிற ஆயுளதில் மங்கிதேய்ந்து தீர்வேனா

எப்பழுதில் ஆழ்வேனோ எப்படித்தான் வாழ்வேனோ
முப்பாலின் முடிவுபாலில் முடிச்சுண்டு முடிவேனோ
அப்பாலுக்கு அப்பாலேகி அப்பழுக்கு அற்றஉந்தன்
கப்பலுக்கு காத்திருப்பே னோசொல்க பெரும்பொருளே!
Title: Re: சுயப்புலம்பல்
Post by: Global Angel on September 02, 2012, 08:18:14 PM
என்ன  திடீர்னு   பரம் பொருளை தேட ஆரம்பித்து விட்டீர்கள் .... இறைவன் படைத்தது இதை எல்லாம் ஆண்டு  அணிபவித்து  அப்புறம் வர சொல்லித்தான் ... நீங்கள் என்ன இந்த சிறு வயதிலேயே கிளம்பிடிங்க .... நல்ல வரிகள் ...  நல்ல கவிதை சாதரணாமாக எல்லாருக்கும் புரிவதில் இது கடினமாக இருக்கும் என நினைகின்றேன் ... ஆனல் எனக்கு நன்கு புரிந்த கவிதை
Title: Re: சுயப்புலம்பல்
Post by: ஆதி on September 02, 2012, 09:03:13 PM
எல்லோரும் கல்லூரி காலத்தின் பட்டு இனத்தாரின் ரசிகனாகத்தான் இருப்பார்கள்

நான் அப்போதே பட்டினத்தாரின் ரசிகனாக இருந்தேன், துன்பத்தில் மிக உழன்றிருக்கையில் சித்தர்களின் கரம் தான் என்னை ஆறுதலாய் தேற்றின‌

ஆன்மிகம் எனக்குள் எப்போது ஒரு அடி நீரோட்டமாய் ஓடிக் கொண்டே இருக்கிறது, அவை அவ்வபோது இப்படி கவிதைகளாக வரும், நிறைய ஆன்மிக கவிதைகள் இருக்கு அவ்வபோது பதிக்கிறேன்

பின்னூட்டத்துக்கு நன்றிங்க‌
Title: Re: சுயப்புலம்பல்
Post by: Global Angel on September 03, 2012, 12:20:30 AM
ஒஹ் .. அப்போ ஒண்ணு ஒண்ணா போடுங்க நாங்களும் படிச்சு பயன் பெறலாம் ..
Title: Re: சுயப்புலம்பல்
Post by: Anu on September 04, 2012, 06:27:36 AM
romba romba nalla polambi irukinga aadhi.
manithanoda enna kuviyaluku
oru ellai illa. adhai unga kavithaigal la paakuren.
nandri nandri. naanum padichi therinjikiren.
Title: Re: சுயப்புலம்பல்
Post by: ஆதி on September 04, 2012, 09:00:20 AM
romba romba nalla polambi irukinga aadhi.
manithanoda enna kuviyaluku
oru ellai illa. adhai unga kavithaigal la paakuren.
nandri nandri. naanum padichi therinjikiren.


நன்றிங்க அனு