FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 01, 2012, 07:15:23 PM

Title: ஈஸியான...பிரட் ரோல்
Post by: kanmani on September 01, 2012, 07:15:23 PM
பிரட் ரோல் மிகவும் சிறந்த ஈஸியான வெஜ் ரெசிபி. இது காலை மற்றும் மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு சுவையான ஸ். இதில் பிரட்டை வைத்து ரோல் செய்து கொடுப்பதால், அனைத்துக் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும். மேலும் இதில் எந்த காய்கறிகளையும் போட்டு செய்யலாம். அத்தகைய சுவையான பிரட் ரோல் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான அளவு :

பிரட் - 8-10 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோல் உரித்தது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
சீஸ் - 10 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது உப்பு சேர்த்து, நன்கு மசித்துக் கொள்ளவும். பின் அதில் பச்சை பட்டாணி, எலுமிச்சை சாறு, சீஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் இரு முனைகளையும் வெட்டி, தண்ணீரில் ஒரு முறை லேசாக பிரட்டி எடுத்து விடவும். முக்கியமாக அவ்வாறு தண்ணீரில் நனைக்கும் போது, நீண்ட நேரம் வைத்து விடக் கூடாது. பின் அது சொதசொதவென மாறிவிடும்.

பின் அந்த பிரட் துண்டை ஒரு முறை தண்ணீர் முற்றிலும் வடிந்துவிட, பிளியவும். இதனால் பிரட்டில் இருக்கும் அதிகமான தண்ணீர் வந்துவிடும்.

இப்போது அந்த உருளைக்கிழங்கு கலவையை அந்த பிரட்டில் வைத்து, அதனை சுருட்டி, முனையை நன்கு கைகளால், அழுத்தவும். ஈரம் இருப்பதால், பிரட் ஒட்டிக் கொள்ளும்.

இதேப்போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்யவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சுருட்டி வைத்திருக்கும் பிரட் துண்டுகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின்னர் அதனை ஒரு தட்டில் டிஸ்யூ பேப்பரை விரித்து, அதில் வைத்து பரிமாறலாம்.

இப்போது அருமையான பிரட் ரோல் ரெடி!!! இதனை சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக இருக்கும்