FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 31, 2012, 11:40:23 PM

Title: சொல்லப்படாத ஒரு காதல்
Post by: ஆதி on August 31, 2012, 11:40:23 PM
சொல்லப்படாத ஒரு காதல்
தன் கன்னிமையின் கர்வத்தோடு
இன்னும் இருக்கிறது
புதிதாய் எனக்குள்...


வழங்கப்படாத ஒரு பரிசைப் போன்று
அது பழமையடைவதில்லை..


பராமரிப்பின்றி கிடத்தப்பட்ட
ஒரு பொருளாக
தூசிப்படிவதுமில்லை..

ஒரு கிழமையில்
ஒரு தருணத்தில்
ஒரு நொடியில்
சொல்லப்படுவதற்காய்
காத்திருக்கிறது அது..

உனக்குள்ளும் இது போலொரு
சொல்லப்படாத காதல்
காத்திருக்கலாம்
எனக்காகவோ
வேறெவருக்காகவோ
Title: Re: சொல்லப்படாத ஒரு காதல்
Post by: Global Angel on September 01, 2012, 02:18:58 AM
சொல்லபட்ட காதலை விட சொல்லாத காதலுக்கு புனிதம் அதிகம் போலும் ... அதை உங்கள் கவிதையில் உணர கூடியதாய் இருக்கிறது


வழங்கப்படாத ஒரு பரிசைப் போன்று
அது பழமையடைவதில்லை..

பராமரிப்பின்றி கிடத்தப்பட்ட
ஒரு பொருளாக
தூசிப்படிவதுமில்லை..


பல காதல் இப்படிதான் போகின்றது .... நல்ல கவிதை ஆதி ...