FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 08:18:35 PM

Title: பதிப்பின் படைப்பு ...!!!
Post by: aasaiajiith on August 31, 2012, 08:18:35 PM
நேற்றும், வழக்கம் போல
நள்ளிரவின் 2 மணிவரையில்
உனக்காகத்தான் விழித்திருந்தேன் !
அடியே தூக்கத்தினை  களவாடிடும்
தூக்க களவானியே !

என் தூக்கத்தினை , தூக்கிசென்ற
உன்னை ஒருவழியாய் சமாளித்து
சமாதானம்செய்துவிட்டு
தூங்கிட சென்றால், தன்
நேரம் தவறாமைக்கென
ஓர் நேரம்காலமே  இல்லாத
விடியல், வெகு விரைவில்

விழிகள்திறந்து விழித்துவிட்டால்
மீண்டும் தூக்கம் என்பது
என்னிடமிருந்து அவ்வப்போது
தவனைமுறையினில் நீ
வாங்கிடமுனையும் முத்தத்தினை போல
மிக மிக கடினம் ..

தூக்கம் கலைந்ததும் வேறென்னவழி
ஸ்ரீராமஜெயம் எழுதிடும்
ஸ்ரீ ராம பக்தனை போல
நினைவினில் உன்னை ஓடவிட்டு
எழுதுகோலினை காகிதத்தில் ஓடவிட்டேன்
ஓடி ஓடி ஒருவழியாய் இதோ
இப்பதிப்போடு இணைப்பை இரண்டு
பதிப்பினை முடித்து , ஓய்வெடுத்துக்கொண்டன
எழுதுகோலும் , உன் நினைவும் .....

பதிப்பின் படைப்பு