FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 31, 2012, 04:53:50 PM
-
சீனிப் பணியாரத்தை
சுவைத்தவாறு
வியப்பில்
காதுவரை நீண்டக் கண்களுடன்
ராஷச ராட்டினத்தைப்
பார்த்திருந்தவளுக்கு
தெரிய வந்தது தான்
திருவிழாக் கூட்டத்தில்
காணாமல் போனது
பணியாரம் தீர்ந்த பொழுது..
-
எதையுமே புதிதாக பார்கின்ற பொது அதன் கவர்ச்சி நம்மளை அறியாமலே அதுக்குள்ள இழுத்திடும் .. உதாரணம் காதல் ... எதாவது தவறு இப்படி ...அதன் இனிமை தீரும் பொது அல்லது ஒரு புள்ளியில நமக்கு திரும்பி பார்க்க தோணும் ... அப்போதுதான் நாம இழந்தது நமக்கு தெரிய வரும் ...
இதை அருமையாக விளக்கும் ஒரு தெளிவான கவிதை ஆதி நன்றிகள் ...நான்கூட முளிசிருக்கேன் ... திருவிளால
::)
-
நீங்கள் சொல்வது சரிதான்
அதுமட்டுமில்லை
வாழ்க்கையில் இப்படித்தான் நாம் பல தருணங்களில் நம்மை அறியாமலே தொலைந்துவிடுவோம், நம் சுயநினைவுக்கு வரும் போது வெகு தூரம் வந்திருப்போம், மீண்டு(ம்) அந்த பழைய நிலைக்கு திரும்ப முடியாதபடி
-
உண்மைதான் ... அனுபவ வரிகள் ..