FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 30, 2012, 11:22:00 PM

Title: காதல் முல்லைகள் iiii
Post by: aasaiajiith on August 30, 2012, 11:22:00 PM



என் நினைவின் நதியினில் நிம்மதியாய்
நெடுந்தூர பயணத்தில் நீ

உனை அவ்வப்போது கரைக்கு அழித்துவிடுகின்றேன்
என் கவிதை ஆலயத்திற்குள் உன் தடம் பதிக்க

லைலாவின் பித்துபிடித்து(காதல்) புலம்பும்
பைத்தியக்காரன் , மஜ்னூவை போல


எத்தனைமுறை அழைத்தாலும் துரிதமாய் வந்துவிடுவாய்
நீ என்ன இரக்கத்தின் சுரங்கமா?

ஒவ்வொரு முறையும் தேவதை உன் துணையோடு
இந்த கிறுக்கனின் கரிக்கோலிளிருந்தும்
கொள்ளை எழில் கொஞ்சும் கவிக்கிள்ளைகள் பிறக்கும் 

ஒவ்வொரு கவிதைக்கும் தத்தம் தன்மையினை
கருத்தில் கொண்டு தலைப்புகள் இட்டாலும்
மொத்தத்தில் அவை  அத்தனையும்
உனக்காக நான் தொடுக்கின்ற காதல் முல்லைகள் 

                  காதல் முல்லைகள் 


Title: Re: காதல் முல்லைகள் iiii
Post by: supernatural on August 31, 2012, 01:32:10 PM
காதலிக்காக தொடுக்கின்ற  காதல் முல்லைகள் அனைத்தும்  மிக அருமை...
படித்ததும்  புரியும் எளிமை நிறைந்த இனிமை வார்த்தைகளால் ஆன வரிகள்...
அன்பு ..காதல் ..நேசம்  இவைகளின் ஆழத்தை எதார்த்தமாய் ...புதுமையாய்  சொல்ல்கின்றன உங்கள் வரிகள்..
வாழ்த்துக்கள்...!!!