FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 30, 2012, 05:45:58 PM

Title: ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்..
Post by: ஆதி on August 30, 2012, 05:45:58 PM
யாருனக்கு இந்த மௌனத்தை
பரிசளித்தாரென தெரியவில்லை..

தலைமுறையின் அடையாளமாய்
உன் முதாதயரின் ஜீன்களில் இருந்து
அது உன்னில் படிந்திருக்க கூடும்..

நீ மௌனத்தை உடுத்தும்
போதெல்லாம்
விழா ஒன்றில் இருந்தோ
வீடு ஒன்றில் இருந்தோ
சந்திப்பு ஒன்றில் இருந்தோ
பலவந்தமாய் வெளியேற்றப்படுவதை போல
என் பேச்சுக்களை புறக்கணித்து
நம் காதலை வெளியேற்றுகிறாய்..

எரியும் உன் மௌனத்திற்கு
ஒரு சிகரட்டின் படிமம் கொடுத்து
அதை கரையவைக்க முயலுகையிலெல்லாம்
அது மேலும் கனன்று என்னை சுடும்..

பாழடைந்த நகரமொன்றின்
கோரத் தனிமையில் தள்ளி
நம் உறவின் கழுத்தை
கூரிழந்த பிளேடில் மெல்ல அறுக்கும்..

அத்தருணத்தில்
வெற்றிரவின் பேய் பிசாசுகளெல்லாம்
மனசினுள் புகுந்து
என்னை கொல்ல ஆரம்பிக்கும்..

யாதும் அறிந்து
எச்சலனமும் அற்று
ஒரு அரக்கனென நீ இருப்பாய்
Title: Re: ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்..
Post by: Global Angel on August 30, 2012, 06:11:58 PM
 ஹஹாஹ்  .. இந்த பசங்கள் எல்லாம் ஒருத்தி தன்ன காதலிக்கும் வரைதான் அவளுக்காக விட்டு கொடுகுறதும் .. அவ பண்றத ரசிகிறதும் .. எல்லாமுமே .. எப்போ அவ அவங்கள காதளிகிராங்கனு தெரியுதோ அப்போ பழிவாங்கும் படலத்தை ஆரம்பிச்சிடுவாங்கப்பா .....ஹஹஹா ..முரட்டு பையங்க ... பாவம் பொண்ணுங்க ... பொண்ணுங்க என்னமோ டெஸ்ட் பண்ணதன் அப்டி எல்லாம் பண்ணுவாங்க  காதல நிச்சய படுத்த ... இந்த பசங்க  யமாடி .... ஹிஹி



Quote
எரியும் உன் மௌனத்திற்கு
ஒரு சிகரட்டின் படிமம் கொடுத்து
அதை கரையவைக்க முயலுகையிலெல்லாம்
அது மேலும் கனன்று என்னை சுடும்..

 ஒரு கோபம் , இயலாமை , இதன் வெளிப்பாடு அருமை ...