FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 30, 2012, 04:45:30 PM

Title: காதல் நெகிழி
Post by: ஆதி on August 30, 2012, 04:45:30 PM
இப்படி அழகாய்
உதட்டை பிதுக்கி சொல்வாயானால்
எத்தனை முறையானாலும்
நிராகரிக்கப்பட தயார் என்று
நீ சொன்னத் தருணத்தில்
உன் காதலின் துளி
என்னுள் உதிர்ந்து மனதை நெகிழ்தியது

மதுவில் மித‌க்கும்
ப‌னிக்க‌ட்டியென‌
க‌ரைய‌ துவ‌ங்கிவிட்டேன்
உன் காத‌லில்

நீ ர‌சிப்ப‌த‌ற்காக‌வே
என்னை அழ‌காய்
வைத்துக் கொள்கிறேன்

நீ பொறாமைப்ப‌ட‌வ‌த‌ற்காக‌வே
பிற‌ ஆண்க‌ளுட‌ன் பேசுகிறேன்

மீண்டும்
உன் காத‌லை நீ சொல்வ‌த‌ற்காக‌வே
உன்னோடான‌ த‌னிமையான‌ ச‌ந்த‌ர்ப‌ங்க‌ளை
உருவாக்குகிறேன்

நீ என்னை பார்க்காமல் போன‌
பொழுதுக்காக எல்லாம் உன்னிடம்
சண்டையிட காத்திருக்கிறேன்

காதல் என்னை மீண்டும்
சிறுப்பிள்ளையாக்கிவிட்டது

தன் கிறுக்குதனங்களை எல்லாம்
என்னை செய்ய வைத்து
வேடிக்கைப்பார்க்கிறது

புரிந்து கொள்ள‌டா
உன் அண்மையும்
தொலைவும்
என‌க்கு ப‌த‌ட்ட‌மான‌தாக‌வே இருக்கிற‌து...

நெகிழி=பிளாஸ்டிக்
Title: Re: காதல் நெகிழி
Post by: Global Angel on August 30, 2012, 05:00:29 PM
ஹஹஹஹா பெண்கள் மனதை நன்றாகவே புரிந்து வைதிருகிண்றீர்கள் ஆதி ... நிஜமாகவே சிரித்துவிட்டேன் .. ஹஹஹாஹ் ... பெண்கள் மனதுக்குள் புகுந்து பார்த்தவர் போல் அருமையான வெளிப்பாடு இது ...அதிலும்

Quote
காதல் என்னை மீண்டும்
சிறுப்பிள்ளையாக்கிவிட்டது

தன் கிறுக்குதனங்களை எல்லாம்
என்னை செய்ய வைத்து
வேடிக்கைப்பார்க்கிறது

அப்பட்டமான உண்மை ... சின்ன பிள்ளைகள் போல் எல்லாம் நமக்கு நமக்கே நமக்குன்னு எதிர்பார்க்க தோணும் ....

Quote
புரிந்து கொள்ள‌டா
உன் அண்மையும்
தொலைவும்
என‌க்கு ப‌த‌ட்ட‌மான‌தாக‌வே இருக்கிற‌து...

ஹஹஹஹாஹ் ...