FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 30, 2012, 03:33:25 PM
-
பழைய பேபர்
ப்ளாஸ்டிக் கவர்
காலி புட்டி வாங்குறதே.." என
பழைய வார்த்தைகளை
புதிதாய் உச்சரித்தவாறு
தினமும் வருகிறான் அவன்..
பள்ளி நாட்களிலும்
படிக்காமல் ஊர் சுற்றுகையில்
பழைய சாக்கும்
சைக்கிளும் தந்து
காலி புட்டி வாங்க
அனுப்பி விடுவதாய் மிரட்டுவார் அப்பா
எத்தனை ஞாபகம்
வைத்திருப்பினும்
எதையாவது ஒன்றை
இழக்கதான் நேரிடுகிறது
பழையப் பொருட்கள் போடுகையில்..
குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள்..
சேகரித்து வைக்க நினைத்த
நாளிதழ்களின் மருத்துவ குறிப்புக்கள்..
அண்ணனுக்கு பிடித்த
நடிகரின் படங்கள்.. என்று
நீளும் பட்டியலினூடே
போட இயலாதவையாய்
கணவனைப் பிரிந்து வந்த
அக்காவின் கண்ணீரும்..
அப்பாவின் குடிப் பழக்கமும்..
-
ஆமாம் பழையன என்று எவ்ளோ நமக்கு சந்தோசத்தை பயன்பட்ட விசயங்களை ஒதுகவேண்டி இருக்கின்றது ... ஆனால் கொஞ்சமும் விரும்பாத ... வெறுக்க கூடிய விசயங்களை தூக்கி போடா முடிவதில்லை ... மிகவும் அருமையான கவிதை ... ஒரு பழைய பேபர் குள்ள இவ்ளோ வாழ்கையின் அர்த்தத்தை அடக்கி இருகின்றீர்கள் ... அபாரம்..
அண்ணனுக்கு பிடித்த
நடிகரின் படங்கள்.. என்று
நீளும் பட்டியலினூடே
போட இயலாதவையாய்
கணவனைப் பிரிந்து வந்த
அக்காவின் கண்ணீரும்..
அப்பாவின் குடிப் பழக்கமும்..