FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on August 30, 2012, 01:57:41 PM

Title: உயிர் உறவு ..
Post by: supernatural on August 30, 2012, 01:57:41 PM
உறவுகள்  சூழ்ந்து வாழ்ந்தாலும்..
என் நெஞ்சம் தேடும் உறவு...
உன் உயிர் உறவே ...
உன் நெஞ்சோடு முகம் சாய்த்து ...
உலகம்தன்னை நான் மறந்து..
உன் உறவாய் நானும்...
என் உறவாய் நீயும்...
முழுமுழுதாய் வாழ்ந்து ..
உன் நெஞ்சில் உறைந்த உயிராய்..
உயிரில் கலந்த உணர்வாய்..
ஒரு ஜென்மம் அல்ல...
ஓராயிரம் ஜென்மம் ...
தெவிட்டா வாழ்வு அதை  ...
ரசித்து   வாழ வேண்டும்...