FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 30, 2012, 12:36:16 AM

Title: நினைவு பிறைகள் - 4
Post by: ஆதி on August 30, 2012, 12:36:16 AM
'ம்'

செவ்விதழ் சேர்த்து
'ம்' என நீ
இசைப்பதற்காகவே
இன்னும் பேசலாமெனத் தோன்றும்..

'ம்'மிற்கு இணையாய்
ஒரு எழுத்தையும்
இதுவரை எழுத இயன்றதில்லை
என்னால்..

பிள்ளை வயதுகளில்
கேட்பது போன்று
எவரேனும் என்னை
என்னவாக ஆசையெனக் கேட்டால்
உன் உதடுகளில்
'ம்'மாக வேண்டும் என்பேன்..

உன் 'ம்'மில்
நானிருந்திருக்கிறேனோ என்னவோ
ஊறியிருக்கிறேன்

ஓங்காரத்தில் எல்லா
ஒலிகளும் அடக்கம்
'ம்'காரத்தில் எனது
ஊழியே அடக்கம்

சிரமப்படாமல்
மிகச் சாதாரணமாய்
நீ எழுதிவிடுகிற கவிதை
இந்த 'ம்'

உனதிந்த 'ம்'மிற்கும்
உண்டு
நீட்டல் குறுகல்..

களைத்த உறக்கத்தில் நீ
உச்சரிக்கும் 'ம்'மில்
உருகி ஒழுகிவிடுவேன்..

'ம்'மோடு இயந்த
நினைவுகளும் 'ம்'மாக்கிவிட்டன..

எனது காதலுக்கு
நீ சொல்லாத 'ம்'தான்
கனத்துப் போதனது..

பிறை வளரும்...
Title: Re: நினைவு பிறைகள் - 1
Post by: suthar on August 30, 2012, 01:17:59 AM
intha kavithaikku suvaiyum athigam
sugamum athigam

intha m ku thanisuvai undu
ithazh ondrodu ondru porunthiythal antha suvaiyo.... theriya villai

 nee, chee, vaa, po, m,  ena
orezhuthil kavi punainthida
ummal mattumey mudium penney.....!

endra ennudaiya pazhaya kirukkal ngabagam......m engira oru vaarthaikey ivalavu neela kavithai..... unmaiyil nengal solvathu pol m enbathai neetavum mudium kurukavum mudium.......
Title: Re: நினைவு பிறைகள் - 1
Post by: Global Angel on August 30, 2012, 01:32:10 AM
Quote
சிரமப்படாமல்
மிகச் சாதாரணமாய்
நீ எழுதிவிடுகிற கவிதை
இந்த 'ம்'

உனதிந்த 'ம்'மிற்கும்
உண்டு
நீட்டல் குறுகல்..

களைத்த உறக்கத்தில் நீ
உச்சரிக்கும் 'ம்'மில்
உருகி ஒழுகிவிடுவேன்..


ம்ம்ம்ம்ம்ம்
 ஏதாவது புரிதா ... புரிந்திருக்காது .. எனக்கே புரியவில்லை பொங்கல்... இதுதான் சிருங்காரம் அப்டின்னு சொல்லுவாங்க .. ம்^... இதுக்கு இத்துனை மயக்கம் என்பது தெரியவிலையே ... அடிகடி இனி நான் ம் சொல்லணும் ... யாருக்காவது என்னை பார்த்து கவிதை சொல்ல தோணலாம் யார் கண்டா....




நிச்சயமாய் இப்படி ஒரு கவிதை எழுதும் காதலனை எந்த காதலியும் ப்ரியமாட்டாள்....  சுவையான சுகமான கவிதை ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .
Title: Re: நினைவு பிறைகள் - 1
Post by: ஆதி on August 30, 2012, 01:44:44 AM
intha kavithaikku suvaiyum athigam
sugamum athigam

intha m ku thanisuvai undu
ithazh ondrodu ondru porunthiythal antha suvaiyo.... theriya villai

 nee, chee, vaa, po, m,  ena
orezhuthil kavi punainthida
ummal mattumey mudium penney.....!

endra ennudaiya pazhaya kirukkal ngabagam......m engira oru vaarthaikey ivalavu neela kavithai..... unmaiyil nengal solvathu pol m enbathai neetavum mudium kurukavum mudium.......

//intha m ku thanisuvai undu
ithazh ondrodu ondru porunthiythal antha suvaiyo.... theriya villai//

அடடா என்ன ஒரு ரசனை

பின்னூட்டத்துக்கு நன்றி சுதர்சன்
Title: Re: நினைவு பிறைகள் - 1
Post by: ஆதி on August 30, 2012, 01:48:09 AM
Quote
சிரமப்படாமல்
மிகச் சாதாரணமாய்
நீ எழுதிவிடுகிற கவிதை
இந்த 'ம்'

உனதிந்த 'ம்'மிற்கும்
உண்டு
நீட்டல் குறுகல்..

களைத்த உறக்கத்தில் நீ
உச்சரிக்கும் 'ம்'மில்
உருகி ஒழுகிவிடுவேன்..


ம்ம்ம்ம்ம்ம்
 ஏதாவது புரிதா ... புரிந்திருக்காது .. எனக்கே புரியவில்லை பொங்கல்... இதுதான் சிருங்காரம் அப்டின்னு சொல்லுவாங்க .. ம்^... இதுக்கு இத்துனை மயக்கம் என்பது தெரியவிலையே ... அடிகடி இனி நான் ம் சொல்லணும் ... யாருக்காவது என்னை பார்த்து கவிதை சொல்ல தோணலாம் யார் கண்டா....




நிச்சயமாய் இப்படி ஒரு கவிதை எழுதும் காதலனை எந்த காதலியும் ப்ரியமாட்டாள்....  சுவையான சுகமான கவிதை ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .

நன்றிங்க, பட் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை, காதல் தந்ததெல்லாம் நெடிய தனிமையைத்தான் :(

அதனால்தான் நினைவு பிறைகள் என்று தலைப்பு வைத்தேன்

அடுத்தது ம்ஹூம் பற்றி எழுதனும்
Title: Re: நினைவு பிறைகள் - 1
Post by: Global Angel on August 30, 2012, 01:51:03 AM
ம்க்கும் போட்ட பிட் எல்லாம் வீண் :( ... போங்கப்பா  கடைய மூடிக்குறேன்   ... :(


ஹிஹி ... ஆதி காதலிக்கும் தருணங்களை விட காதலில் காயப்படும் தருணங்களில்தான் காதலை அதிகமாக காதலிகின்றார்கள்... நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்
Title: Re: நினைவு பிறைகள் - 1
Post by: ஆதி on August 30, 2012, 01:56:30 AM
//ம்க்கும் போட்ட பிட் எல்லாம் வீண் :( ... போங்கப்பா  கடைய மூடிக்குறேன்   ... :( //

ஹா ஹா ஹா

//காதலிக்கும் தருணங்களை விட காதலில் காயப்படும் தருணங்களில்தான் காதலை அதிகமாக காதலிகின்றார்கள்...//

சத்தியமான வார்த்தைகள்
Title: Re: நினைவு பிறைகள் - 2
Post by: ஆதி on September 05, 2012, 02:12:09 AM
'ஹும் ஹும் ஹும்'

நான் எழுத
விரும்பும் இலக்கியம்..

என்னால் எழுத
ஒண்ணாமல் போன இலக்கணம்..

'ஹும் ஹும் ஹும்'

உனது ஒவ்வொரு 'ம்ஹும்'மும்
உதிர்ந்து கிடக்கிறது
அதிகாலை விண்மீகளாய்
எனது இதயத்தில்..

எனது படைப்புகளின்
பிள்ளையார் சுழியாகவும்
மாறிவிட்டது
உனது 'ம்ஹும்'

'ம்ஹும்'மிற்கு இணையாய்
சிணுங்க தெரியாததால்
வெட்கி மௌனிக்கின்றன்
உன் கால் கொலுசுகளும்..

நீ உச்சரிக்கும் போது
இன்னும் அழகாகிவிடுகிறது
'ம்ஹும்'மும்
உனது இதழ்களும்..

அவ்வபோது எண்ணுவதுண்டு
ஏழிசையும்
வெவ்வேறு ஓசையும்
பிறந்தது 'ம்ஹும்'மில் இருந்தோ என..

அர்த்தங்கள் யாவும்
அர்த்தப் படுகின்றன*
உன் 'ம்ஹும்'மினுள்
நுழைந்துவிட்ட பிறகு..

குழந்தையின் 'ங்கா'வைப் போல்
உன் 'ம்ஹும்'மிற்கு
ஒப்பாய் எந்த*
உவமைகளையும் சொல்ல இயலவில்லை
என்னால்..

எப்படி எப்படியோ
எழுதிப் பார்க்கிறேன்
உனது உதடுகளைவிட*
எழிலாய் என்னால்
எழுத இயலவில்லை 'ம்ஹும்'மை..
Title: Re: நினைவு பிறைகள் - 2
Post by: Global Angel on September 05, 2012, 02:16:45 AM
Quote
'ம்ஹும்'மிற்கு இணையாய்
சிணுங்க தெரியாததால்
வெட்கி மௌனிக்கின்றன்
உன் கால் கொலுசுகளும்..




ஹஹஹா ... சூப்பர் ... போடா ... இதுக்கு எப்போ கவிதை எழுத போறீங்க ... னியாமவே ரொம்ப நல்ல இருக்கு ... ஏமாளிகள் இருக்கும் வரை நீங்கள் கவிதை எழுதி எமற்றிகொண்டே இருப்பீர்கள் ...  ஹஹஹா
Title: Re: நினைவு பிறைகள் - 2
Post by: ஆதி on September 05, 2012, 02:30:24 AM
போடா பற்றி எழுதலாமே

இதுவரை எழுதவில்லை

ஒரே ஒரு பத்தி மட்டும் எழுதியதாக ஞாபகம்

'டா' போட்டதற்கு
வருத்தப்பட்ட நீதான்
'டேய்'யும் போட்டாய் :D

இந்த கவிதையில் ரசனை தானே இருக்கு, வார்த்தை ஜாலமில்லையே :)

நன்றிங்க‌
Title: Re: நினைவு பிறைகள் - 3
Post by: ஆதி on September 08, 2012, 02:08:06 AM
நீ

குழந்தையின் முதல்
புன்னகையைப் போல
தூயவள் நீ

கண்ணாடி அணிந்த நிலா
நீ சிரிக்கும் பொழுதெலாம்
மனதினுள் விழுந்துவிடுகின்றன
வானவில் வண்ண விண்மீன்கள்..

எனது எழுத்துக்களின்
இலக்கணம் நீ
எனது காதலின்
தலைக்கனம் நீ
எனது மறதியும்
நினைவும் நீ..

இலக்குகள் அறியாமல்
நான் புரப்பட்டப்
பயணம் நீ

உன்னைச் சந்திக்காத
கிழமைகள்
மிக சாதாரண
நாட்களாகிவிடுகின்றன..

நீ என்னை
நீங்கிய பிறகு
ஒரு அர்த்தமற்ற
மௌனமாய் மாறிவிட்டேன் நான்..
Title: Re: நினைவு பிறைகள் - 4
Post by: ஆதி on September 08, 2012, 03:41:05 PM
ஒயர் கம்பியில்
உட்கார்ந்திருக்கும்
ஒற்றைப் பறவையாய்
அமர்ந்திருக்கிறேன் தனிமையில்

அகன்று சென்றவளே
உனக்கு எனை
இயற்கையே ஞாபகமூட்டும்

நீ நடக்கும் பாதைகளில்
பூத்திருக்கும் மலர்களில்
உன் பெயர் பாடும்
என் பெயரும்
எழுதப்பட்டிருக்கும்

காற்ற*டிக்கும் இல்லையில்
க*ரைந்தொழுகும் ஒலியில்
என் கவிதை வழிந்திருக்கும்

வற்றிய குளத்தில்
வாடிகிடக்கும் சருகில்
என் புலம்பல் கலந்திருக்கும்

இருள்கட்டிய வானில்
இருமும் இடியில்
என் கதறல்
சிதறி தெறிக்கும்

நீயற்ற உனது
இல்ல முகப்பில்
குழுமி இருக்கும் தனிமையில்
குவிந்திருக்கும் என் எண்ணங்களும்
உன*து நினைவுகளில்..

உனது வாசலில் விழும்
மழையிலும் நான்
அழுத கண்ணீரின்
ஈரமிருக்கும்..

எங்காவது குயிலிசை கேட்டால்
என்னை எண்ணிக்கொள்
உன்னைப் பாடும்
ஒரு குயில் இங்கே
இருக்கிறதென..

எங்கு மயில் கண்டாலும்
இதை நினை
என்றன் கவிதை நோட்டில்
பத்திரமாய் இருக்கும்
மாநிற மயிலிறகு நீ..
Title: Re: நினைவு பிறைகள் - 4
Post by: Global Angel on September 10, 2012, 01:28:16 PM
Quote
நீ என்னை
நீங்கிய பிறகு
ஒரு அர்த்தமற்ற
மௌனமாய் மாறிவிட்டேன் நான்..

அருமையான  வரிகள் ... பிடித்தவர்கள்  சிறிது பிரிந்தால்  இப்படிதான் இருக்கும் .......

Quote
இருள்கட்டிய வானில்
இருமும் இடியில்
என் கதறல்
சிதறி தெறிக்கும்


இதுதான் நெஞ்சை கசக்கும் வரிகள் என்பது போலும் ... தனிமை கவிதைகள் இரண்டும் நன்று ஆதி