FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 29, 2012, 11:49:40 PM
-
உன் காதல் கடிதங்களில் இருந்து
விரிகிற எனக்கான புல்வெளியால்
நிரம்பிவிடுகிறது எனது அறை
சாயம் போகாத
ஒரு மயிலின் நடனத்தில் துளிர்க்கும்
மழைநாளின் சில்லிப்பையும்
தலைவருடலுக்கு ஏங்கும்
நாய்க்குட்டியின் குழைவையும்
உண்டாக்கும் உன் வார்த்தைகள்
உறிஞ்சி குடிக்கின்றன
என் சிறிது நேரத் தனிமையை...
அழுத்தமாய் நீ பதித்தனுப்பும்
உன் வண்ண இதழ்களின் சுவட்டிலிருந்து ஊறும்
எச்சில் காயாத முத்தங்களில்
ஈரம் ஆறாமல் இருக்கிறது
யுகயுகங்களாய் தணியாத உன் பேரன்பு..
-
அழுத்தமாய் நீ பதித்தனுப்பும்
உன் வண்ண இதழ்களின் சுவட்டிலிருந்து ஊறும்
எச்சில் காயாத முத்தங்களில்
ஈரம் ஆறாமல் இருக்கிறது
யுகயுகங்களாய் தணியாத உன் பேரன்பு..
ரொம்ப அருமை காதல் கவிதை .... அதை எழுதுவதென்றால் மென்மையாக எழுதுவதாக முன்னர் குறிபிட்டு இருகின்றீர்கள் .. அந்த மேன்மையை இபொழுது உணருகின்றேன் .... உங்கள் காதல் அனுபவம் ரொம்ப சுவையானது போல் தெரிகிறது ... போங்கப்பா பொறமை வருது
-
இதெல்லாம் சும்மா கற்பனைங்க, நன்றிங்க